July 5, 2026
  • July 5, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் திரை விமர்சனம்

by on January 1, 2022 0

பாலியல் வன்முறை செய்தவர்களை பழி வாங்கும் கதைகள் இந்திய படங்களில் நிறையவே வந்துள்ளன. அவற்றில் காமுகர்களை பிடித்துவந்து கொல்வதில் தொடங்கி அவர்களின் ஆணுறுப்பை அறுப்பது வரை பலவிதமான கதைகள் இங்கே சொல்லப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட கதைகள் எல்லாமே சட்டப்படி தவறானவை என்றாலும் அவை மக்களிடம் வரவேற்பு பெறுவதற்கு காரணம், சட்டப்படி அப்படிப்பட்ட குற்றத்துக்கு நீதி மன்றம் சென்றால் நீதி தாமதப்படுவதும் மறுக்கப்படுவதும்தான். அப்படியே தாமதப்பட்டு நீதி கிடைத்தாலும் அதன் தண்டனை மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. ஆனால் பாலியல் […]

Read More

அர்னால்டும் ஜாக்கி சானும் தமிழ் பேசி வரும் அயர்ன் மாஸ்க்

by on December 31, 2021 0

ஜாக்கி சான், அர்னால்ட் இருவரும் இணைந்து நடித்த “அயர்ன் மாஸ்க்” படம் வெளியீடு வலிமை’க்கு பிறகு வருகிறது! சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் வசூலை வாரிக் குவித்த “அயர்ன் மாஸ்க்” ஆங்கிலப் படம், தமிழ் மக்களின் உள்ளத்தை வாரிக் குவிக்க தமிழில் வருகிறது! வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், மகிழ்ந்து சிரிக்க காமெடி காட்சிகளும் அரங்கத்தை அதிர வைக்கப் போகிறது. 49.1 பில்லியன் பட்ஜெட்டில் உருவான பிரமாண்டமான படம்.! டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்ற ஜாக்கி […]

Read More

லேபர் திரைப்பட விமர்சனம்

by on December 31, 2021 0

‘இருந்தால் வேலை… இல்லாவிட்டால் சாலை’ என்று வாழும் அன்றாடக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி நம்பிக்கையால் மட்டுமே கட்டப்படுகிறது என்பதை கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வியலாகவே சொல்லி ஒளிப்பதிவும் செய்து இயக்கி இருக்கிறார்  சத்யபதி. அதனாலேயே பல சர்வதேச விழாக்களில் தேர்வாகவும், தேர்வாகி விருதுகளையும் வென்றுள்ளது படம். மக்கள் மனங்களை வெல்லுமா பார்க்கலாம். கட்டிட மேஸ்திரியாக வேலை செய்யும் முத்து தன் மகன் தன்னைப்போல் கஷ்டப்படாமல் பட்டம் பெற்று இன்ஜினீயராக ஆக வேண்டும் என்று விரும்புவது ஒரு பக்கம் […]

Read More

வேலன் திரைப்பட விமர்சனம்

by on December 31, 2021 0

தயாரிப்பு – Skyman Films International கலைமகன் முபாரக் இயக்கம் – கவின் நடிப்பு – முகேன், மீனாட்சி கோவிந்தராஜ், பிரபு, சூரி, ராகுல்  இசை – கோபி சுந்தர் ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன் தலைப்பைப் பார்த்தாலே அது ஹீரோவின் பெயர் என்பது தெரிந்து விடும். ஆனால், அவர் எவ்வளவு பெரிய அலப்பறை நாயகன் என்பது முதல் காட்சி பார்த்தால்தான் புரியும். பொள்ளாச்சியில் நடக்கிற கதையில் அன்று ப்ளஸ் டூ ரிசல்ட் வரவிருக்க, டீக்கடையில் டீ […]

Read More

பிரதமர் மோடிக்கு வாங்கப்பட்டுள்ள அதி நவீன கார்கள் பற்றி அரசு விளக்கம்

by on December 30, 2021 0

பிரதமர் மோடி பயணிக்க ரூ.12 கோடி விலையில் இரண்டு ‘மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 கார்டு’ ரக கார்கள் வாங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பற்றிய புதிய தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று வெளியிட்டன. அந்தத் தகவல்களில் இருந்து… ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை விட வாங்கப்பட்டுள்ள கார்களின் விலை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள விலையில் மூன்றில் ஒரு பங்குதான். எஸ்.பி.ஜி. (அதிரடி கமாண்டோ படை) பாதுகாப்பு வரையறையின்படி 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரதமர் கார் […]

Read More

மீண்டும் திரைப்பட விமர்சனம்

by on December 30, 2021 0

நீண்ட காலம் கழித்து இந்தப்படத்தை ‘மீண்டும்’ இயக்கியிருப்பதன் மூலம் களத்தில் இறங்கியிருக்கிறார் ‘சிட்டிசன்’ ஷரவண சுப்பையா. சிட்டிசன் சமயத்தில் அந்தப்படம் மூலம் தமிழில் ஒரு பரபரப்பைக் கிளப்பிய அவர் இந்தப்படத்திலும் ஒரு பரபரப்புடன் வந்திருக்கிறார்.  ‘ஒரு மனைவி இரண்டு கணவன் : ஒரு மகன் இரண்டு தந்தை’ என்ற வாசகம்தான் அந்தப்பரபரப்பு ஏற்படக் காரணம். இந்தப்படமும் ஏதோ பிரச்சினையை முன்னெடுத்துச் சொல்லப்போகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அதைத் தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறாரா என்று பார்ப்போம். நாயகன் […]

Read More

குடும்ப உறவுகளின் மதிப்பைச் சொல்லும் படம் வேலன் – மீனாட்சி கோவிந்தராஜன்

by on December 28, 2021 0

Skyman Films International கலைமகன் முபாரக் தயாரித்து, கவின் இயக்கத்தில், பிக்பாஸ் முகேன் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக தானும் இருப்பதில், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் வெகு உற்சாகமாக இருக்கிறார். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு விதமான கதாபாத்திரங்களுக்கும் அட்டாகாசமாக பொருந்தக்கூடிய தனித்தன்மையான தோற்றப்பொலிவை ஜோதிகா, நஸ்ரியா நஷீம் போன்ற வெகு சில ஹீரோயின்களே பெற்றிருந்தனர், அந்த வரிசையில் அவர்களுக்கடுத்து ஒரு வலுவான இடத்தை பெற்றுள்ளார் நாயகி மீனாக்‌ஷி. அவரது நடிப்பில் வரவிருக்கும் […]

Read More

RRR படம் வெளியாகி வசூல் குவித்தால் எங்கள் படமும் ஓடும் – சிவகார்த்திகேயன்

by on December 28, 2021 0

சென்னையில் நடைபெற்ற RRR பட பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்  பேசியது… நான் ராஜமெளலி சாரோட மிகப் பெரிய ஃபேன், மகாதீரா படம் பார்த்ததில் இருந்து. அதற்கு பிறகு நான் இ படம் வந்த போது தான் நான் சினிமா உலகிற்குள் வந்தேன். அந்த படம் பார்த்த போது ஒரு ஈயை வைத்து இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியுமா என பயங்கர ஆச்சரியமாக இருந்தது. இன்னொரு பக்கம், ஒரு ஈயை வைத்தே படம் […]

Read More