July 5, 2026
  • July 5, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்பட விமர்சனம்

by on January 14, 2022 0

பொங்கலுக்கு ஒரு கிராமத்துப் படம் வராவிட்டால் எப்படி என்று வந்திருக்கும் படம்.  இதில் கொம்பு வச்ச சிங்கமாக சசிகுமார். அப்படித்தான் நினைக்கிறோம். மற்றபடி தலைப்புக்கான அர்த்தம் புரியவே இல்லை என்பதுதான் உண்மை. நட்பு, காதல், பழி வாங்கல், கொலை அதனுடன் சாதி அல்லது அரசியல்… இதுதான் சசிகுமார் பட பார்முலாவாக இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதில் சம்பந்தமில்லாமல் துருத்தலாக பெரியாரிஸமும் உள்ளே வந்திருக்கிறது. இது சாதிப்படமில்லை என்பதற்காக பெரியாரை வலுக்கட்டாயமாக உள்ளே கொண்டுவந்தாலும் படத்துக்குள் […]

Read More

சினம் கொள் திரைப்பட விமர்சனம்

by on January 13, 2022 0

உடலில் சிறிய காயம் பட்டாலே அது ஆற நாட்கள் பல ஆகின்றன. காயம் ஆறினாலும் அதன் வடுக்கள் காலப்போக்கில் நிலைத்திருக்கின்றன. என்றால் ஒரு போரின் வடுக்களும், போர் தந்த அதிர்வுகளும் எத்தனைக் காலம் நிலைத்திருக்கும்..? அதைச் சொல்ல வருகிறது இந்தப்படம். இலங்கையில் நடைபெற்ற போர் எத்தனை அப்பாவித்தமிழர்களைக் கொன்று குவித்தது என்பதை உலகமே அறியும். அந்தப்போரில் பலர் சிறைப்பிடிக்கப்பட்டும், காணாமல் போயும் இருக்க, போரை அடுத்து ஈழம் எப்படி இருக்கிறது, தமிழர்களின் இன்றைய நிலை என்ன என்பதை […]

Read More

வடிவேலுவுக்காக லண்டனில் முகாம் இட்டிருக்கும் இசையமைப்பாளர்

by on January 12, 2022 0

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை சிவாங்கி, ‘டாக்டர்’ பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் […]

Read More

பூச்சாண்டி திரைப்பட விமர்சனம்

by on January 11, 2022 0

முழுக்க மலேசியாவில் தயாரான படம் இது. முற்றிலும் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் நடிக, நடிகையர்களே நடித்திருக்கும் இந்தப்படத்தில் ஒரே தமிழ்நாட்டு நடிகராக இருக்கிறார் ‘மிர்ச்சி ரமணா ‘. அவரே கதையின் நாயகனாக இருக்கிறார். நாம் குழந்தையிலிருந்து அதிகம் கேள்விப் பட்டிருக்கும் பூச்சாண்டி என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்பதைப் பற்றி நமக்கு தெரியாது. அதன் பொருளைப் பொதிந்து தமிழனின் சரித்திரப் பெருமைகளை ஆன்மிகம் தூவி புனைகதை ஆகவும் ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் ஆகவும் தந்திருக்கிறார் இயக்குனர் ஜேகே […]

Read More

மக்கள் நலனைக் காக்க கார்த்தியின் கையெழுத்து வேட்டை

by on January 9, 2022 0

தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளைப் படித்து தினசரி படித்து வருகிறோம். நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மக்களிடம் ஆன் லைன் வழியாக கருத்து கேட்டு வருகிறார்கள். இதற்கு, […]

Read More

டாக்டர் ஆகிறார் சிலம்பரசன் டி ஆர்

by on January 8, 2022 0

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு, வருகிற ஜனவரி 11-ஆம் தேதி’ கவுரவ டாக்டர் ‘ பட்டம் கொடுத்து சிறப்பு செய்யவிருக்கிறது. இளைஞர்களின் கனவுகளையும், தொலைநோக்குப் பார்வையையும் கணக்கில் […]

Read More

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே திரை விமர்சனம்

by on January 7, 2022 0

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் இது. இளம் பெண் ஒருத்தி தற்கொலை செய்து கொள்வதிலிருந்து படம் தொடங்குகிறது. அதேபோன்ற தற்கொலைகள் மேலும் ஒன்றிரண்டு  நடக்க போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள். இன்னொரு பக்கம் அரவிந்த் என்ற வாலிபன் நந்தினியை காதலிக்கிறான். அரவிந்தை நந்தினியும் முழுதாக நம்புகிறாள். இதற்கு இடையில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்கள் வீட்டு பாத்ரூமில் கேமராவை வைத்து படம் எடுப்பது காண்பிக்கப்படுகிறது. ஒருகட்டத்தில் நந்தினிக்கு ஒரு […]

Read More

அன்பறிவு படத்தின் திரை விமர்சனம்

by on January 6, 2022 0

இரட்டைப் பிறவிகள் கால சூழ்நிலையால் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் உத்தம புத்திரன் காலத்து கதை. உத்தம புத்திரன் என்றாலே இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு அதிகபட்சம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1958-இல் வெளிவந்த படம் நினைவுக்கு வரலாம். ஆனால், அதற்கும் முன்பே பி.யு.சின்னப்பா நடித்து 1940-இல் முதல் உத்தம புத்திரன் வெளிவந்தது. இதற்கெல்லாம் மூலம் 1939-இல் அலெக்ஸாண்டர் டூமா எழுதி ‘தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ என்று ஹாலிவுட்டில் வெளிவந்த படம்தான். […]

Read More

நாளை முதல் (ஜனவரி 7) வெளியாகிறது ‘அடங்காமை’ !

by on January 6, 2022 0

திருக்குறள் சொல்லும் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை ‘. இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள்.  “திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் ‘என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் . ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது […]

Read More