July 4, 2025
  • July 4, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஓடிடிக்கு சென்சார் தேவை என்பதை அஞ்சலியின் கோலத்தைப் பார்த்தாவது உணருமா அரசு
December 5, 2020

ஓடிடிக்கு சென்சார் தேவை என்பதை அஞ்சலியின் கோலத்தைப் பார்த்தாவது உணருமா அரசு

By 0 775 Views

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக அந்தஸ்து, ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி Netflix தளத்தில் வெளியிட்டிருக்கிரார்கள்.

இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.

இதில் அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. ஒரே சமயத்தில் நான்கு இயக்குனர்கள் இயக்கி இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது..

இந்த பாவக் கதைகள் படத்தின் ஒரு பகுதியை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். மேலும், விக்னேஷ் சிவன் இயக்கும் பகுதியில் அஞ்சலி மற்றும் கல்கி உள்ளிட்டோர் நடித்துள்ளாரகள்.

மேலும், இந்த படத்தின் நடிகை அஞ்சலி வெளிநாட்டு பெண்ணோடு ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளாராம். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அஞ்சலி படுக்கை அறை காட்சியில் அரைகுறை ஆடையில் நடித்த காட்சியின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தியேட்டர்களில் வெளியாகும்படத்துக்கே சென்சார் தேவைப்படும் நிலையில் வீட்டுக்குள் வரும் ஓடிடிக்கு சென்சார் கண்டிப்பாக தேவைதானே?

Anjali