September 26, 2026
  • September 26, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரஜினியின் இந்த வருட பிறந்த நாளும் சென்னையில் இல்லையாம்
December 6, 2020

ரஜினியின் இந்த வருட பிறந்த நாளும் சென்னையில் இல்லையாம்

By 0 696 Views

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டிசம்பர் 31-ம் தேதி கட்சி தொடங்க உள்ள தேதியை அறிவிப்பதாகவும், ஜனவரியில் கட்சி உதயமாகும் என்றும் சொன்னார் அல்லவா..? கூடவே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டியது எனது கடமை என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிக்குச் செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்ததாக கூறப்படு கிறது. ஆனால் இயக்குநர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் கடந்த நவம்பர் 27-ம் தேதி உயிரிழந்ததால் டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்புக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து டிசம்பர் 12-ம் தேதி தனது பிறந்தநாளை பெங்களூரில் அண்ணன் குடும்பத்தினருடன் கொண்டாடும் ரஜினிகாந்த், டிசம்பர் 15-ம் தேதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதால் படப்பிடிப்பு நடைபெற உள்ள ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அதிகம் ரசிகர்கள் கூட்டம் கூடாதவாறும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அதிக கவனம் செலுத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இதன் அடிப்படையில் இன்று பெங்களூரு கிளம்பி விட்டாராம் ரஜினி.