October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிரதமர் நிதிக்கு கோலிவுட்டில் முதல் நிதி தந்த அஜித்
April 7, 2020

பிரதமர் நிதிக்கு கோலிவுட்டில் முதல் நிதி தந்த அஜித்

By 0 883 Views

சினிமா படப்பிடிப்புகள் முடங்கி விட,திரைப்படத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்குத் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இதில் ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்தனர்.

இவை தவிர பிரதமர், மாநில முதல்வர்கள் கோரிய நிதிக்கு இந்தி, தெலுங்கு நட்சத்திரங்கள் அள்ளிக்கொடுக்க, தமிழில் முதல்வர் நிதி தந்த சிவகார்த்திகேயன் தவிர வேறு யாரும் நிதி உதவி அளிக்காதது பரவலாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இதில் முக்கியமாக பெரிய சம்பளம் வாங்கும் அஜித், விஜய் போன்றோர் நிதி தராதது குறித்து விவாதங்கள் நடந்து வர, இன்று தமிழ்த் திரையுலகில் முதல் நடிகராக, பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி மற்றும் பெப்சி என அனைத்துக்குமே அஜித் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு 50 இலட்ச ரூபாய், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 இலட்ச ரூபாய் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு 25 இலட்ச ரூபாய் என நிதியுதவி கொடுத்துள்ளார்.

இதுதவிர திரையுலக மக்கள்தொடர்பாளர்கள் சங்கத்துக்கு ரூ இரண்டரை இலட்சம், இவற்றோடு இரண்டு திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கங்களுக்கு தலா இரண்டரை இலட்சம் கொடுத்துள்ளார். இதன் மொத்த தொகை ஒரு கோடியே முப்பத்திரெண்டரை இலட்சம்.

அஜித் ரகர்கள் இந்த விஷயத்தைக் கொண்டாட, மற்ற நடிகர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.