November 29, 2021
  • November 29, 2021
Breaking News

Tag Archives

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி

by on October 2, 2021 0

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை மக்கள் […]

Read More

பெப்ஸி அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றார் பாதிக்கப்பட்ட ஸ்டன்ட் வீரர்

by on October 10, 2020 0

செங்குன்றம் ஞாயிறு பகுதியில் வசிப்பவர் கணேசன் (எ) மின்ட் கணேசன் (48). இவர் கடந்த 25 வருடங்களாக சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளார். அந்நியன் திரைப்படத்தில் மிகவும் சவாலான காட்சியில் நடித்து கோமா நிலைக்கு சென்று, பின்பு குணமடைந்தார். மேலும் எந்திரன், கில்லி, கைதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு யசோதா என்ற மனைவி, 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகனும் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக தயாராகி வருகிறார். இந்நிலையில் கடந்த 4 […]

Read More

சின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூலை 8 முதல் தொடரலாம் – ஆர் கே செல்வமணி

by on July 1, 2020 0

இன்று ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கும் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதிலிருந்து… “சின்னத்திரை படப்பிடிப்புகள் எப்போது தொடங்கப்படும் என்று தொழிலாளர்களும், தயாரிப் பாளர்களும் என்னிடம் கேட்டு வருகின்றனர். ஜூலை 6 ஆம் தேதிக்குப் பிறகு பழைய நடைமுறைப்படி செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது. பழைய நடைமுறை என்றால் ஜூன் 19 ஆம் தேதிக்கு முன்னாடி இருந்த தளர்வுகளுடன் பணிபுரியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளதால், வருகின்ற 6 ஆம் தேதிக்கு பிறகு, அதாவது […]

Read More

அஜித் பாணியிலேயே உதவிய அஜித் பட நாயகி

by on April 11, 2020 0

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ’கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘என் கிட்ட மோதாதே’ உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்த பார்வதி நாயர் அஜித் பாணியிலேயே அனைத்து தரப்பினருக்கும் உதவியிருக்கிறார். பெப்ஸி அமைப்புக்கு 1500 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியதோடு, பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும் நன்கொடை வழங்கியிருக்கிறார்.     அத்துடன் சம்பளம் இல்லாமல் அவதியுறும் சினிமா பத்திரிகையாளர்களின் […]

Read More

பிரதமர் நிதிக்கு கோலிவுட்டில் முதல் நிதி தந்த அஜித்

by on April 7, 2020 0

சினிமா படப்பிடிப்புகள் முடங்கி விட,திரைப்படத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்குத் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். இதில் ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்தனர். இவை தவிர பிரதமர், மாநில முதல்வர்கள் கோரிய நிதிக்கு இந்தி, தெலுங்கு நட்சத்திரங்கள் அள்ளிக்கொடுக்க, தமிழில் முதல்வர் நிதி தந்த சிவகார்த்திகேயன் தவிர வேறு யாரும் நிதி உதவி அளிக்காதது பரவலாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இதில் முக்கியமாக […]

Read More

லேட்டாக வந்தாலும் சிறப்பாக உதவிய லேடி சூப்பர் ஸ்டார்

by on April 4, 2020 0

ஊரடங்கு காரணமாக திரைத்துறை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, முதலில் உதவி செய்யும்படி திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரினார். அதன்பிறகு நடிகர் சங்கம் கோரியது. முதல் உதவியாக ரூ. 10 லட்சத்தை பெப்ஸிக்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பம் வழங்கியது. தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பல கலைஞர்களும் உதவித்தொகை வழங்கி வருகிறார்கள். இதில் லேட்டஸ்டாக நயன்தாரா இணைந்திருக்கிறார். பெப்ஸிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை தந்து மற்றவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் அவர். இந்த நிலையிலும் அஜித், விஜய், […]

Read More

சூர்யா கார்த்தி சிவகுமாரைத் தொடர்ந்து பெப்ஸிக்கு சிவகார்த்திகேயன் உதவி

by on March 23, 2020 0

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வாரம் முதல் மார்ச் 31ம் தேதி வரை படப்பிடிப்புகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டதன் விளைவாக சினிமா சங்கங்களின் கூட்டமைப்பான பெப்ஸியைச் சேர்ந்த சுமார் 25,000 தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கியுள்ளனர். அவர்களில் 15,000 பேரின் வாழ்வாதாரம் அன்றாடம் படப்பிடிப்பு நடந்தால் மட்டுமே என்று இருக்க, டிவி தொடர்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு விட மிகவும் பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதனால் பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி இன்று நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாவினால் வளர்ச்சி […]

Read More

இளையராஜாவைப் பெருமைப்படுத்துவதைத் தாண்டிய நோக்கம் – விஷால்

by on January 7, 2019 0

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து தமிழ்ப்படவுலகின் பொக்கிஷமாக இருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விழா எடுக்கிறது. இவ்விழா வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. ‘இளையராஜா 75’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் வெளியீட்டு விழா நேற்று மாலை செங்கல்பட்டு அருகேயிருக்கும் ‘மகேந்திரா வோர்ல்டு’ சிட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின்பு நடந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷாலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் […]

Read More

பிக் பாஸ் 2 விவகாரம் – பெப்ஸி போராட்ட அறிவிப்புக்கு கமல் ஒத்துழைப்பாரா?

by on June 24, 2018 0

இப்போது எண்டமால் நிறுவனம் தயாரித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் பெப்ஸி தொழிலாளர்கள் குறைந்த அளவே பயன்படுத்தப்படுவதால் அவர்களை நிறுத்திக் கொண்டு இதன்மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று ‘பெப்ஸி’ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பெப்ஸி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது… “பிக் பாஸ் முதல் சீசன் நடந்தபோதே அதில் பெப்ஸி தொழிலாளர்களை வேலைக்கு வைக்காமல் மும்பை தொழிலாளர்களை வைத்தே வேலைகள் […]

Read More