March 24, 2023
  • March 24, 2023
Breaking News
April 11, 2020

அஜித் பாணியிலேயே உதவிய அஜித் பட நாயகி

By 0 527 Views
Parvati Nair glamour stills

Parvati Nair 

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ’கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘என் கிட்ட மோதாதே’ உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்த பார்வதி நாயர் அஜித் பாணியிலேயே அனைத்து தரப்பினருக்கும் உதவியிருக்கிறார்.

பெப்ஸி அமைப்புக்கு 1500 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியதோடு, பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும் நன்கொடை வழங்கியிருக்கிறார்.

 

Parvathy Nair

 

அத்துடன் சம்பளம் இல்லாமல் அவதியுறும் சினிமா பத்திரிகையாளர்களின் நிலை அறிந்து  அவர்களுக்கும் கூட அஜித் போலவே உதவியிருக்கிறார் பார்வதி நாயர்.

தற்போது, தமிழில் ‘ஆலம்பனா’ படத்தில் நடித்து வரும் பார்வதி நாயர், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று தென்னிந்திய மொழித் திரைப்படங் களுடன் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் கோடி கோடியாக சம்பாதித்த ஹீரோ, ஹீரோயின் எல்லாம் கண் மூடி வாய்பொத்தி இருக்க பார்வதி நாயரின் பெரிய மனது பாராட்ட வைத்திருக்கிறது.