June 6, 2023
  • June 6, 2023
Breaking News
April 12, 2020

வைரல் ஆகிவரும் நடிகைகளின் சேலஞ்ச் வீடியோ

By 0 662 Views

சோஷியல் மீடியாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆகி விடும்.. அதாவது ஐஸ் பக்கெட், பாட்டில் மூடி சேலஞ்ச் போல சமீபத்தில் டி-ஷர்ட் சேலஞ்ச் ஒன்று வைரலாகி வருது.

அதாவது, வழக்கமாக டீசர்ட் அணியும் முறையை மாற்றி, கைகளை தரையில் ஊன்றி, கால்களை சுவற்றில் பதித்து தலைகீழாக நின்றபடி டீசர்ட் மாட்டிக்கொள்வது தான் இந்த சவால். இதில் சினிமா நடிகைகள் ரொம்ப மெனக்கெட்டு முயற்சி செய்து அதை நிறைவேற்றி வருகிறார்கள். அந்த வகையில் நடிகைகள் மந்த்ரா பேடி, சஞ்சனா சிங், ரகுல் ப்ரீத் சிங், நேகா சர்மா ஆகியோர் இந்த சவாலை செய்து சமூகவலைதளத்தில் ஷேர் செய்திருக்கிறார்கள்.

அதே சமயம் வழக்கம் போல ரசிகர்களில் சிலர் வரவேற்றாலும் பலரும் இதை விமர்சித்தே வருகின்றனர். கொரோனாவால் நாடே அல்லல்பட்டு கொண்டு இருக்கிறது. அடுத்த வேளை உணவுக்கு கூட வழியின்றி பலர் திண்டாடுகின்றனர். இந்த நேரத்தில் இதெல்லாம் தேவை தானா என்று கேட்டு காட்டமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்…

அந்த வீடியோ கீழே…