October 10, 2024
  • October 10, 2024
Breaking News
April 8, 2020

தமிழுக்கு வரும் டோலிவுட் ஹீரோ அல்லு அர்ஜுன்

By 0 840 Views

டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. தமிழ் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் விஷயம் இன்று அவர் பிறந்தநாளில் வெளியானது அவருக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனரான சுகுமார் இப்படத்தை இயக்குகிறார். இவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா மற்றும் ஆர்யா 2 என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார் இணையும் மூன்றாவது படம் ‘புஷ்பா’ . இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது தெலுங்கு ரசிகர்களிடேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கின்றார்.

PUSHPA_TAMIL

PUSHPA_TAMIL

ஶ்ரீமந்துடு, ஜனதா கேரஜ், ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பாக நவீன், ரவி இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் டி.எஸ்.பி இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவர் அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணியில் உருவான ஆர்யா மற்றும் ஆர்யா 2 படத்திற்கு இசையமைத்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களிடம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

போலந்து நாட்டை சேர்ந்த ‘கியுபா’ இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

அனைத்து திரைப்பட ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.