September 23, 2023
  • September 23, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மனோரமா மகன் பூபதி அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டது ஏன் – விளக்கம்
April 8, 2020

மனோரமா மகன் பூபதி அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டது ஏன் – விளக்கம்

By 0 509 Views

1500 படங்கள் நடித்து யாராலும் தகர்க்க முடியத சாதனை கொண்ட நடிகை மறைந்த ஆச்சி மனோரமா. இவரின் மகன் பூபதி. இவரும் சில படங்களில் நடித்துள்ளார்.

பூபதிக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். தற்போது ஊரடங்கு நீடிப்பதால் மது எங்கும் கிடைக்காத நிலையில் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மனோரமாவின் பேரனும், பூபதியின் மகனுமான டாக்டர் ராஜராஜன்…

“௳து அருந்தும் பழக்கம் கொண்ட அப்பாவுக்கு 144 தடை உத்தரவால் மது கிடைக்கவில்லை. எனவே ஓரிரு தூக்க மாத்திரை சாப்பிட்டு அமைதியாக ஓய்வெடுத்து வந்தார். இப்போது இந்த மாத்திரைக்கும் தட்டுப்பாடு ஏற்பட குடியை நிறுத்தும் போது குடிப்பவர்களுக்கே வரும் நடுக்கம் அப்பாவுக்கு வந்தது. எனவே அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

இது பற்றி அப்பா ஏதோ தற்கொலை செய்ய முயன்றது போல் சிலர் வீண் வதந்திகளை பரப்புகிறார்கள். அது தவறு. அப்பா நலமாக உள்ளார்..!” எண்று தெரிவிக்கிறார்.

நல்லது… பூபதி உடல் தேறட்டும்..!