July 11, 2025
  • July 11, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • செப்டம்பர் மாதத்தில் கொரோனா பிரச்சினை தீர்ந்து விடும் – நடிகர் ராஜேஷ் திட்டவட்டம்
July 11, 2020

செப்டம்பர் மாதத்தில் கொரோனா பிரச்சினை தீர்ந்து விடும் – நடிகர் ராஜேஷ் திட்டவட்டம்

By 0 785 Views

தற்போது ‘மாஸ்டர் ‘ உள்ளிட்ட படங்களிலும், ‘ரோஜா ‘ சீரியலிலும் நடித்து வருகிறார் பிரபல நடிகர்  ராஜேஷ்.

நடிப்பைத் தாண்டி ஜோதிடம், ஆவிகளுடன் பேசுதல், Premonition போன்ற Parallel Science ல் ஏராள தரவுகள் வைத்திருக்கும் ராஜேஷ் இப் போதைய கொரோனா பிரச்சினை இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று தனக்குத் தெரிந்த ஜோதிடம் மூலம் ஆறுதல் வார்த்தை கூறுகிறார்.

“இந்த (ஜூலை) 16 ம் தேதி சூரியன் கடகத்திற்கு மாறுகிறது. அதன் பின் கொரோனா பிரச்னை நம் நாட்டில் கால்வாசி குறைந்து விடும். அடுத்த மாதம் சூரியன் சிம்மத்திற்கு இடம் பெயர்கிறது. அதன் பிறகு பாதிப் பிரச்னை தீரும்.

செப்டம்பர் மாதம் ராகு – கேது பெயர்ச்சி நடக்கும். அதன் பின் கொரோனா ஒரு மேட்டரே இல்லை என்றாகி விடும்! மத்திய, மாநில அரசுகள் “சே.. இதற்கா இவ்வளவு காலம் மக்களைப் பயமுறுத்தி வைத்தோம்! ” என்று வெட்கப்படும் சூழல் உருவாகும் ” என்கிறார் ராஜேஷ்.

ஜோதிடத்தை நம்புகிறோமோ இல்லையோ ராஜேஷின் வார்த்தைகள் நமக்கு நல்ல நம்பிக்கையையும் ஆறுதலையும் தருவதாக இருக்கின்றன.

– வித்தகன்