தொடர்ந்து பாலிவுட்டில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாகவே இருக்கின்றன. அதில் சமீபத்திய கவலை தரும் செய்தி இந்திய சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கு கொரானா தொற்று உறுதியாகியிருக்கிறது.
அதை அவரே அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அத்துடன் அவரது குடும்பத்தினருக்கும் covid-19 டெஸ்ட் எடுக்கப்பட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள்.
டுவிட்டரில் அமிதாப்பச்சன் கேட்டுக் கொண்டிருப்பது “என்னுடன் கடந்த பத்து நாட்களில் எந்த விதத்திலாவது தொடர்பு கொண்டு இருப்பவர்கள் கண்டிப்பாக பரிசோதனைகளை மேற் கொள்ளுங்கள்…” என்பதுதான்.
அமிதாப் விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்..!