April 16, 2024
  • April 16, 2024
Breaking News

Monthly Archives: March 2023

ஷூட் த குருவி திரைப்பட விமர்சனம்

by on March 19, 2023 0

டார்க் காமெடி ஜானரில் ஹாலிவுட்டிலேயே இவ்வளவு படங்கள் வந்திருக்கிறதா என்று திகைக்கும் அளவுக்குத் தமிழில் நிறைய படங்கள் வந்து விட்டன. அப்படிப்பட்ட வரிசையில் தன் படத்தையும் இணைத்துக் கொண்டார் இந்தப் பட இயக்குனர் மதிவாணன்.  மிகவும் எளிதான கதைதான். ஆனால் அதை அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளோடு சுவாரஸ்யப்படுத்திக் கொடுத்திருக்கிறார் அவர். குருவியை சுடுவதில் என்ன இருக்கிறது என்று தலைப்பைப் பார்த்து முடிவு செய்து கொள்ள வேண்டாம். குருவி என்பது பிரபல ரவுடி குருவி ராஜன். அஞ்சா நெஞ்சன் […]

Read More

குடிமகான் திரைப்பட விமர்சனம்

by on March 17, 2023 0

இயல்பான கதைக் களத்தையும், புதிய நடிகர்களையும் வைத்துக் கொண்டு நிறைவான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ்.என் அவரது திறமையை நம்பி சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ்.சிவகுமார் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். படத்தில் சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன் என்று நமக்கு அறிமுகமானவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான். மற்றபடி நாயகனாக நடித்திருக்கும் விஜய் சிவன் உள்பட சேது ராமன், , ஜி.ஆர் […]

Read More

ராஜாமகள் திரைப்பட விமர்சனம்

by on March 16, 2023 0

ஒரு அன்பான மனிதன் பணியாளாக இருந்தாலும் தன் குழந்தையை ஒரு ராஜாவின் வாரிசு போலத்தான் வளர்ப்பான். அந்தக் குழந்தைக்கும் தன் அப்பா ஒரு ராஜாதான்.  இந்தச் சின்ன இழையை வைத்து இரண்டு மணிநேரத் திரைக் கதையாக மாற்றிப் படமாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ஹென்றி. ஆடுகளம் முருகதாஸ்தான் அந்த அன்புத் தந்தை. சொந்தமாக செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து கீழ்த்தட்டு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது மகள் (பிரிதிக்ஷா) மீதான அன்பில் என்ன கேட்டாலும் […]

Read More

மான்வேட்டை திரைப்பட விமர்சனம்

by on March 15, 2023 0

பெரிய பட்ஜெட் படங்கள்தான் இரண்டாவது பாகம் தயாரிக்க வேண்டுமா, சின்ன பட்ஜெட் படங்களால் முடியாதா..? என்று களமிறங்கி இருக்கிறார் இயக்குனர் திருமலை. அதற்கு அவர் எழுதி இருக்கும் கதையும் சிறியதுதான். இளமை துடிப்புள்ள மூன்று இளம் ஜோடிகள் காட்டுப்பகுதிக்கு தனிமையில் இருக்க சுற்றுலா செல்கிறார்கள். அங்கே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் டெண்டுகள் அடித்து தங்க, அந்த இடத்தில் மர்மமான முறையில் அமானுஷ்யத்தில் சிக்குகின்றனர். இளஞ்ஜோடிகள் என்பதால் அவர்களின் இளமை கொண்டாட்டத்தையும், அழகையும் பார்வையாளர்களுக்கு விருந்தாக்கி விட்டு அவர்களுக்கு […]

Read More

மெமரீஸ் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2023 0

சற்றே புதுமையான கதைக் களத்தையும் திரைக்கதையையும் கொண்டிருக்கும் படம். கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’ படத்தை போல ஏன் ஒரு படத்தைத் தமிழில் எடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உருவான ‘கன்சப்ஷன்’ ஆக இந்தப் படம் இருக்கக்கூடும். ஒருவர் மனதில் இருந்து நினைவுகளை நீக்கி சில மணி நேரத்துக்கு வேறு நினைவுகளை உள்ளே புகுத்த அறிவியலால் முடியும் என்ற கற்பனைக் களம் கொண்ட கதை இது. வித்தியாசமான ஒரு டிவி ஷோ அரங்கேற அதை நடத்துகிறார் ஹரிஷ் பெராடி. […]

Read More

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-

by on March 15, 2023 0

குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவது என்ற லட்சியம் இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் அதிகமாக உள்ளது: பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-ல் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது தென் இந்திய மக்களின் முக்கிய வாழ்க்கை லட்சியங்கள்களில் உடல்நலம், கொடை மற்றும் சுற்றுலா ஆகியவை உள்ளன. ● சுகாதார லட்சியங்கள் 73 சதவீதம் அதிகரித்துள்ளது கோவிட்-19 தொற்று பாதிப்புக்குப் பிறகு கொடை தொடர்பான சிந்தனை 61 சதவீதம் அதிகரித்துள்ளது சென்னையில், சேவைப் […]

Read More

65 படத்தின் திரை விமர்சனம்

by on March 15, 2023 0

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து போன டைனோசர் உள்ளிட்ட உயிரினங்களை மறு உருவாக்கம் செய்து உலகையே பிரமிப்பில் ஆழ்த்தினார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.  மீண்டும் அதுபோன்ற டைனோசர்களை வைத்து படம் செய்ய வேண்டும் என்றால் அதில் புதுமையாக என்ன இருக்க முடியும்..? வேறென்ன… கதைதான்..! டைனோசர்கள் உலா வர வேண்டும். அதில் மனிதர்களும் இருக்க வேண்டும் என்றால் ஸ்பீல்பெர்க் செய்ததைப் போல் இப்போதைய காலகட்டத்தில் டைனோசர்களை மறு உருவாக்கம் செய்தாக வேண்டும் – அதனால் இந்தப் படத்தில் […]

Read More

காவேரி மருத்துவமனை சாதித்த பலூன் (DCB) கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி

by on March 14, 2023 0

மருந்து பூசப்பட்ட பலூன் (DCB)-ஐ பயன்படுத்தி சிக்கலான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்திய சென்னை காவேரி மருத்துவமனை ● அடைப்பு ஏற்பட்ட தமனியை விரிவாக்க இன்றைக்கு 95% ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைகளில் ஸ்டென்ட்கள் தேவைப்படுகின்றன; இந்த ஸ்டென்ட்கள் மீண்டும் குறுகுவதால் ஸ்டென்ட்-ஐ மீண்டும் பொருத்தும் செயல்முறை அல்லது பைபாஸ் அறுவைசிகிச்சை தேவைப்படக்கூடும். ● மருந்து பூசப்பட்ட பலூன் என்பது, ஸ்டென்ட் பயன்பாட்டை அவசியமற்றதாக்கி தமனிகளின் இயல்பான செயல்பாட்டை அப்படியே தக்க வைப்பதற்கான ஒரு புதிய மாற்று வழிமுறையாகும். […]

Read More

பியூட்டி திரைப்பட விமர்சனம்

by on March 14, 2023 0

வழக்கமாக, தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் ஆண்கள் விரும்புவார்கள். ஆனால், இந்தப் படத்தில் நாயகன் ரிஷி, அழகான பெண்கள் என்றாலே வெறுப்பதுடன் அழகற்ற அல்லது ஊனமுற்ற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவராக இருக்கிறார். அதற்குக் காரணம், அழகான ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட அவர் தந்தை பாதிக்கப்பட்டதால் மகனை அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் என்று சொல்லியே வளர்த்திருக்கிறார். இந்நிலையில், […]

Read More