October 12, 2026
  • October 12, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ராட்சசன் ஓடலைன்னா அடுத்த படம் நடித்துக் கொடுக்கிறேன்- விஷ்ணு விஷால்
September 26, 2018

ராட்சசன் ஓடலைன்னா அடுத்த படம் நடித்துக் கொடுக்கிறேன்- விஷ்ணு விஷால்

By 0 1265 Views

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசன்’.

விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை ‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் படத்தைப் பற்றி விஷ்ணு விஷால் கூறியதிலிருந்து…

“முண்டாசுப்பட்டி’ படத்தின்போதே, இயக்குனர் ராமிடம் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என்று கேட்டேன். அவர் “கதை எழுதிட்டு இருக்கேன். கொஞ்சம் நாள் ஆகும்…” என்றார். பின் “அந்த கதை உங்களுக்கு செட் ஆகாது…” என்றார், எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

பின்னர் ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் என்னை அழைத்து கதையை சொன்னார், கதையில் ஆக்‌ஷன் அதிகமாகவே இருந்தது. எனக்கு அவ்வளவு ஆக்‌ஷன் செட் ஆகாது என்று கூறினேன். பல தடைகளுக்குப் பிறகும் இந்த கதை என்னையே தேடி வந்தபோது எனக்குதான் இந்தக் கதை போல என்ற உணர்வு எழுந்தது.

கதை ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நடக்கும். அதில் அமலா பால் கதாபாத்திரமும் ஒன்று. அவர் 25 நாட்களுக்கும் மேல் நைட் ஷூட்டிங்கில் நடித்துக் கொடுத்தார். படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ரிலீஸ் நேர பயம் எனக்கு இல்லை.

இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும், அப்படி படம் ஓடலைன்னா தயாரிப்பாளருக்கு அடுத்த படம் நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று இந்த மேடையில் சொல்லிக் கொள்கிறேன்..!”

அடடே..!