October 12, 2026
  • October 12, 2026
Breaking News
January 12, 2019

விஷால் மணக்கப் போகும் பெண் இவர் இல்லையாம்

By 0 961 Views

விஷால் தன் திருமண செய்தி உண்மைதான் என்று அறிவித்தாலும் அறிவித்தார். மீடியாக்களும், சமூக வலைதளங்களும் சுதாரித்து விட்டன.

இரண்டு நாள்களாக செய்திகளில் விஷால் மணக்கப்போகும் பெண் இவர்தான் என்று ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் விஷால். அவரது மக்கள் தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “நடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்தப் படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன் ‘விஷாலின் மணமகள்’ என்று வெளி வந்து  பரவி கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும்.   

முறைப்படி அறிவிப்பு  வெளியாகும்.மேலும் திருமணம் பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்..!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக, மக்களே… தேவையில்லாம ஒரு பொண்ணு வாழ்க்கையிலும், விஷால் வாழ்க்கையிலும் விளையாடாதீங்க..!