August 31, 2026
  • August 31, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • உயர் சிகிச்சைக்காக அப்பா டிஆர் உடன் வெளிநாடு செல்கிறோம் – சிம்பு தகவல்
May 24, 2022

உயர் சிகிச்சைக்காக அப்பா டிஆர் உடன் வெளிநாடு செல்கிறோம் – சிம்பு தகவல்

By 0 820 Views

நேற்றில் இருந்து பன்முகத் திறமைகள் கொண்ட கலைஞரும் சிம்புவின் அப்பாவுமான டி. ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

தற்போது நான்கு நாட்களாக அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் உயர் மருத்துவ சிகிச்சைக்காக அவர் வெளிநாடு கொண்டு செல்லப்படலாம் என்றும் தகவல் கசிந்தது.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…

“எனது ஆருயிர் ரசிகர்களுக்கும் , அன்பான பத்திரிகை , ஊடக நண்பர்களுக்கும் வணக்கம் . எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் , அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம் .

அங்கு பரிசோதனையில் , அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் , அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் , அவர் உடல் நலன் கருதியும் , உயர் சிகிச்சைக்காகவும் , தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.

அவர் முழு சுய நினைவுடன் , நலமாக உள்ளார் . கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து , உங்கள் அனைவரையும் சந்திப்பார் . உங்கள் பிரார்த்தனைகளுக்கும் , அனைவரின் அன்புக்கும் நன்றி . நன்றி ,

– உங்கள் அன்புள்ள , tr -சிலம்பரசன்

என்று குறிப்பிட்டுள்ளார். டி ஆர் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்படுவாரா அல்லது அமெரிக்கா அழைத்து செல்லப்படுவாரா என்பது உள்ளிட்ட மேல் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

அவர் நலம் பெற பிரார்த்திப்போம்..!