July 11, 2026
  • July 11, 2026
Breaking News
July 11, 2026

லவ் ஓ லவ் திரைப்பட விமர்சனம் (3.75/5)

By 0 17 Views

காதல் படங்களில் இரண்டு வகை ஒன்று, நாம் அறியாத புதுவிதமான காதலைச் சொல்வது. இன்னொன்று இன்றைய நிலையில் நம்மைச் சுற்றி நடக்கும் காதலர்களின் காதல் பரிமாணம் சொல்வது.

இந்தப் படத்தில் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் சொல்லி இருக்கும் காதல், இன்றைய காதல் உறவுகளையும் அதனுடன் வரும் எதிர்பார்ப்புகளையும் வெகு இயல்பாக, அதே நேரத்தில் இப்போதைய காதலர்களுக்கு படிப்பினையாக இருக்கும் விதத்தில் அணுகுகிறது.

கட்டுக்கோப்பான வாழ்க்கை நடத்த தெரிந்த இளைஞன் நாயகன் பவிஷ், நாக துர்காவிடம் காதல் வயப்பட்ட பிறகு அப்படியே தலைகீழாக மாறிப் போகிறார். காதல் படுத்தும் பாட்டால் கடனாளியாகப் போகிறார். அதனால் ஏற்படும் உறவுக் சிக்கல் உளவியல் சிக்கலாகி காதலே வேண்டாம் என்கிற நிலைக்கு வருகிறார். 

ஆனால் பவிஷ் மீது ஏற்பட்ட காதலால் அவரை இழக்க மனம் இல்லாமல் இருக்கிறார் நாக துர்கா. ஆனால் அந்தக் காதல் நிறைவேற வேண்டும் என்றால் நாக துர்காவுக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார் பவிஷ்.

அதன்படி நடந்து நாகதுர்காவால் பவிஷின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடிந்ததா அவர்கள் காதல் வெற்றி பெற்றதா என்பது தான் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் பவிஷ், நடனம் மற்றும் நடிப்பில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதுடன் அவ நடிப்பில் முதிர்ச்சியும் தெரிகிறது.

அத்துடன் ஆக்‌ஷன் காட்சிகள், நாக துர்கா மீதான கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் என அனைத்திலும் மிகை இன்றி நடித்து, பாதிக்கப்பட்ட ஆண்களின் மனம் கவர்கிறார்.

பக்கத்து வீட்டுப் பெண் என்பதற்கான பக்காவான உதாரணமாக தெரிகிறார் கதாநாயகியாக நடித்திருக்கும் நாக துர்கா. அதனாலேயே அவர் செய்யும் தவறுகளை நம்மால் மன்னிக்க முடிகிறது.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வராகவன், மகளிர் சங்க தலைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் ஆகியோர் தங்கள் பிரபலத்தால் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள்.

இந்த கலர்ஃபுல்லான காதல் கதைக்கு ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா ஒத்தையாக நின்று உதவி புரிந்திருக்கிறார். 

பாக்ஸன் இசையமைப்பில் பாடல்கள் வணிக ரீதியாக ஒலித்திருக்கின்றன. பின்னணி இசை தேவைக்கேற்ற அளவில் இருக்கிறது.

இயக்குனர் நாடி பிடித்து நடந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த். 

எழுதி இயக்கி இருடmக்கும் மகேஷ் ராஜேந்திரன்,  ஒரு கமர்ஷியல் இயக்குநராக வெற்றி பெற்றிருக்கிறார்.

தற்போதைய காலக்கட்ட இளைஞர்களை குறிவைத்து எழுதப்பட்ட கதை என்றாலும், திரைக்கதையில் குடும்ப உறவுகளையும் இணைத்து அனைத்து வயதினருக்கும் ஏற்ற நாகரீகமான காதல் படமாக இயக்கியிருக்கிறார் அவர்.

வலுவான கருவை மையமாகக் கொண்டு நகரும் இப்படம், காதல், நகைச்சுவை  உணர்வுகளை பொழுதுபோக்காக… குறிப்பாக இளம் ரசிகர்களுக்குக் கொடுக்க முயல்கிறது.

திரைக்கதை வணிகச் சினிமாவின் பாணியைப் பின்பற்றினாலும், எளிதாக ரசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது பல காட்சிகளிலும் தெளிவாகத் தெரிகிறது.

சில காட்சிகளும் வசனங்களும் சற்றே மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், அவை படத்தின் இளமையான தொனிக்கு ஏற்றவாறே அமைகின்றன. அதே சமயம், சொல்ல வருகிற கருத்தை போதனை போல் இல்லாமல் இயல்பாகக் கொண்டு சென்றிருப்பதும் படத்தின் பலமாகும்.

இளம் வயதினர் குறிப்பாக காதலிப்பவர்கள் தவிர்க்க கூடாத படம்.

லவ் ஓ லவ் – அன்லிமிடெட் *கண்டிஷன்ஸ் அப்ளை..!

– வேணுஜி