July 16, 2026
  • July 16, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • அன்பே டயானா திரைப்பட விமர்சனம்

அன்பே டயானா திரைப்பட விமர்சனம்

By on July 17, 2026 0 2 Views

சென்னையை மையமாக வைத்து படங்கள் வருவது மிகவும் குறைவு. அப்படி வந்தாலும் அவை பெரும்பாலும் வடசென்னையை சுற்றியே அமைகிறது.

சென்னை நகருக்குள் இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய பதிவு தமிழ் திரைப்படங்களில் குறைவாகவே இருக்கிறது அந்த குறையை நிறைவு செய்யப்பட்ட இடத்தில் வந்திருக்கும் படம் தான் இது. 

சென்னை பெரம்பூரில் வசிப்பவர்களுக்கு அங்கு வாழ்வார்கள் பற்றி நன்றாக தெரியும் முக்கியமாக நடுத்தர வர்க்கத்து ஆங்கிலோ இந்தியர்கள் பெரம்பூரில் தான் வசித்து வருகிறார்கள். 

அப்படி அங்கு வசிக்கும் ஒரு ஆங்கில பெண்ணை காதலிக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழ் இளைஞனின் கதைதான் இது.

பெரம்பூரில் வசிக்கும் நாயகன் பாரி இளவழகன், அங்கு வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதனை காதலித்து வருகிறார்.

கல்லூரியில் படிப்பதில் இருந்து இந்த காதல் கதை நடந்து வந்தாலும் பாரியுடன் நட்பாக பழகும் ரம்யா அவரது காதலை மட்டும் ஏற்க மறுத்து வருகிறார். 

இந்நிலையில் நெடுங்காலமாக காதலுக்காக காத்துக் கிடக்கும் பாரிக்கு ஒரு கட்டத்தில் ரம்யா சம்மதம் சொல்கிறார்.

பழம் நழுவி பாலில் விழுந்த நிலையில் ரம்யாவின் காதலை ஏற்பதில் இப்போது தயக்கம் காட்டுகிறார் பாரி.

ரம்யாவை விட்டு பாரி விலகிச் செல்ல முயற்சிப்பது ஏன்..? அதனால் அந்த காதலினுடைய நிலை என்ன..? என்பதுதான் மீதி கதை. 

கொஞ்சம் சீரியசான கதை போல தெரிந்தாலும் அதை நகைச்சுவையாகவே சொல்லி இருக்கிறார் படத்தின் நாயகனாக நடித்ததுடன் இயக்கியுமிருக்கும் பாரி இளவழகன்.

இயல்பான நடிப்பில் கவனம் ஈர்க்கும் பாரி, ஒருதலையாக ரம்யாவை காதலிப்பதில் தொடங்கி காதல் கைகூடும் போது அதை ஏற்க தயக்கம் காட்டுவதுடன் கண்டிப்பான அம்மாவுக்கு கட்டுப்பட்டு காதலை ஏற்க முடியாமல் தவிப்பது வரை எளிதாகக் கடந்து எளிதாக நடித்து கடந்திருக்கிறார.

சென்னையில் வசிக்கும் ஆங்கிலம் இந்திய பெண்ணை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நாயகியாக நடித்திருக்கும் ரம்யா ரங்கநாதன். ஆங்கிலம் கலந்த சென்னை தமிழின் உச்சரிப்பையும் மிகச் சரியாக பேசி அசத்தியிருக்கிறார். நடிப்பின் உச்சமே நகைச்சுவையாக நடிப்பது தன் அதையும் இயல்பாக நடித்து பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். 

சமீப காலமாக பல படங்களில் தனது குணச்சித்திர நடிப்பால் நம்மை கவர்ந்து கொண்டிருக்கும் சேத்தன், பாரிஇன்றும்ன் அப்பாவாக இவ்வளவு நாளாக எங்கிருந்தார்? என்று கேட்கும் அளவுக்கு அசத்தலாக நடித்திருக்கிறார். காலையில் மனைவிக்கு பயந்த கணவர், மாலையில் அனைவருக்கும் பயம் காட்டும் குடும்ப தலைவர் என்ற சாதாரண கதாபாத்திரத்தை தன் சிறப்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோஜா, தோற்றம், பேச்சு, நடிப்பு என அனைத்திலும் கம்பீரத்தை வெளிப்படுத்தி கவர்கிறார். கண்டிப்பான குடும்ப தலைவியாக இருந்தாலும், தன் மனதுக்குள் இருக்கும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் காட்சியிலும், தன் தவறை உணர்ந்து மனம் மாறும் காட்சியிலும் தன் அனுபவம் வாய்ந்த நடிப்பால் அசத்தியிருக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பரிதாபங்கள் கோபி, பெங்களூர் தமிழர் வேடத்தில் படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார். மாங்கபாபு கதாபாத்திரத்தில் சில காட்சிகள் வந்தாலும் செல் முருகன், தன் பங்கிற்கும் சிரிக்க வைக்கிறார்.

நாயகனின் மாமா பெண் வேடத்தில் நடித்திருக்கும் நிகிலா சங்கர், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, சகோதரனாக நடித்திருக்கும் சுதர்சன் காந்தி, நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் நடிகர், நடிகை என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாகவும், திரைக்கதைக்கு பலமாகவும் பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், பெரம்பூர் பகுதியை அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார். பார்த்து பழக்கப்பட்ட இங்களாக இருந்தாலும், தன் கேமரா மூலம் அப்பகுதியின் அழகியலை அதிகரிக்கச் செய்திருக்கும் ஒளிப்பதிவாளஃர் ஷெல்லியின் பருந்து கோணக் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.

பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இதமாக பயணிக்கிறது. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் இயல்பு தன்மைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

கதாபாத்திரங்களும், அவர்களது வசனங்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பதை உணர்த்து காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் பார்த்தா.எம்.ஏ, படத்தை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார்.

கதை எழுதி இயக்கியதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பரிதி இளவழகன், சாதாரண காதல் கதை என்றாலும், இயல்பான திரைக்கதை மூலம் அன்லிமிடெட் பொழுதுபோக்கை வழங்கியிருக்கிறார்.

படத்தின் பலமே கதாபாத்திரங்களின் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அதில் இயல்பாக நடித்த நட்சத்திரங்கள் தான். நடிகர்களிடம் இருந்து சரியான முறையில் வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் பாரி இளவழகன், முதல் பாதியை ஊட்டி மலை ரயில் போல் மெதுவாகவும், மென்மையாகவும் நகர்த்தி சென்றாலும், இரண்டாம் பாதியை வந்தே பாரத் ரயில் போல் வேகமாக நகர்த்தி செல்வதோடு, பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கவும் செய்கிறார்.

ஜாலியான பொழுதுபோக்கு படமாக இருந்தாலும், எளிமையான வசனங்கள் மூலம் சாதி, மதம், மொழி, இனம் போன்ற வேறுபாட்டை களைந்து மனிதர்களை அன்பால் ஒன்றிணைக்கும் மேஜிக்கை அனைவரும் ஏற்கும்படி நிகழ்த்தி இயக்குநர் பாரி இளவழகன் கைதட்டல் பெறுகிறார்.

மொத்தத்தில், ‘அன்பே டயானா’ அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த படம்.