Thangar Bachan
இயக்குனரும், நடிகருமான தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆங்கிலத்தில் தமிழுணர்வை வெளிப்படுத்தும் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோரின் கூட்டத்தில், எத்தனை பேர், தமிழ் வழிக் கல்வி படித்தவர்கள்?
இவர்கள் குறைந்தபட்சம், தவறில்லாமல், தமிழில், 10 வரிகள் எழுத முடியுமா?
சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசத்தான் முடியுமா?
ஏதோ பனியன் நிறுவனத்தின் வணிகத்துக்காக களமிறக்கி இருக்கும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், நடிகர்கள் ஹரிஷ் சரவணனும், சாந்தனு பாக்கியராஜும், ஆங்கில வழிக் கல்வி படித்தவர்கள் தான்.
இவர்களுக்கு, ஹிந்தி எதிர்ப்பு என்பது, ஹிந்தி படங்களில் வாய்ப்பு கிடைக்காதவரை தான். இவர்களெல்லாம், நமக்கு தமிழுணர்வை கற்றுத்தர களம் இறங்கி இருப்பது, தமிழினத்தின் தலையெழுத்து.