October 4, 2023
  • October 4, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பணவசதி இல்லாமல் மருத்துவமனைகளுக்கு அலைந்து மரணமடைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் சோகம்
September 10, 2020

பணவசதி இல்லாமல் மருத்துவமனைகளுக்கு அலைந்து மரணமடைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் சோகம்

By 0 441 Views

சின்னத்திரையில் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

கூடவே கை, கால் செயலிழப்பும் ஏற்பட்டுள்ளது. முதலில் சிகிச்சைக்காக சென்னை பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருக்கிறார். அங்கு சிகிச்சைக்குப் போதிய பண வசதி இல்லாத காரணத்தால் பின்னர் அவரை விஜயா மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

Vadivel Balaji Passed Away

Vadivel Balaji Passed Away

பின்னர் அங்கிருந்தும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொரோனா பிரச்சினை காரணமாக அஙகும் இடவசதி இல்லாமல் போகவே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இப்படி அலைக்கழிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி உயிரிழந்தார்.

அவருக்கு வயது 45. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த சோகம் சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரை வட்டாரங்களிலும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.