ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தொடர்ந்து ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’படமும் நேரடியாக OTT -க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் தற்போது இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய கங்கனா, ” ஆம், தலைவி படம் Netflix மற்றும்
Amazon என்ற இரண்டு முக்கிய OTT தளங்களுக்கு விற்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான்.
ஆனால் அதே நேரத்தில் இப்படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக OTTயில் வெளியாகாது. தியேட்டர்களுக்காகத்தான் இந்த படம் இவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. எனவே தலைவிக்கு நேரடி OTT-யை விட தியேட்டர் ரிலீஸ் தான் தகுதியானது…” என்றார் அவர்.
ஜெயம் ரவி நடிப்பில் உருவான தாம்தூம் படத்தில் நாயகியாக தமிழில் அறிமுகமானவர் கங்கனா ரனாவத்(Kangana Ranaut). தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தப் படங்களும் கோடிகளில் வசூல் சாதனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஏ எல் விஜய் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி பெயரில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தலைவி படத்தின் OTT வியாபாரம் மட்டும் சுமார் 70 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாம். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விஜய் அஜித் படங்களின் டிஜிட்டல் உரிமையே 15 கோடியை தாண்டாத நிலையில் ஒரு நடிகையின் படம் இவ்வளவு வியாபாரம் ஆகிறதா என அனைவரையும் மிரள வைத்துள்ளது. கங்கனா ரனாவத்திற்கு ஹிந்தியில் பெரிய வியாபாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.