நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை :
கடலூரில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்து குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். இதனால் கடும் ஆவேசம் அடைந்த அண்ணாமலை, “மரத்து மேல குரங்கு தாவுகிற மாதிரி சுத்தி சுத்தி வரீங்க. ஊர்ல நாய், போய், சாராயம் விற்கிறவன் எல்லாம் கேட்கிறதுக்கு நான் பதில் சொல்லணுமா? நகருங்க” என்று கோபமாக கூறிவிட்டுச் சென்றார்.
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்றதோடு, அவர்களை தரக்குறைவாக அண்ணாமலை பேசியது தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
பல்வேறு தருணங்களில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நீங்கள் மீடியா என்ற கேள்வி கேட்கும் அண்ணாமலை, ஆளும்கட்சி, எதிர்கட்சி மீடியா என தரம் பிரித்து பார்க்கும் அநாகரீக செயலையும் அடிக்கடி செய்து வருகிறது.
பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் போதெல்லாம் அந்த கேள்வி பதில் செல்ல முடியவில்லையென்றால் அதனை திசை திருப்ப இதுபோன்ற செயல்களில் அண்ணாமலை தொடர்ந்து ஈடுபட்டு வருவதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கக்கூடிய பத்திரிகையாளர்களின் தொடர்ந்து அநாகரீகமாக நடந்து கொள்ளும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயலுக்கு, பாஜக தலைமை தடுத்து நிறுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி பத்திரிகையாளர்களை தொடர்ந்து அநாகரீகமாக பேசிய வரும் அண்ணாமலையின் மாநில தலைவர் பதவியிலிருந்து பாஜக தலைமை நீக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.