June 21, 2026
  • June 21, 2026
Breaking News

Tag Archives

வடம் திரைப்பட விமர்சனம்..!

by on March 8, 2026 0

திறமைக்கும், வீண் பெருமைக்குமான போட்டி தான் கதைக்களம். இதற்கு படங்களில் நாம் அதிகம் அறிந்திடாத வட மஞ்சுவிரட்டு என்கிற ஜல்லிக்கட்டுக்கு மாற்றான ஒரு விளையாட்டை வடம் பிடித்திருக்கிறார் இயக்குனர் கேந்திரன். வி. ஊர் பெரிய மனிதரான ஆடுகளம் நரேன் ரொம்ப நல்லவராக இருக்கிறார். மாடுகளம் நரேன் என்று புகழத் தக்க அளவில் மாடுகளின் மேல் அதீத பாசம் கொண்ட அவர் மாட்டுச் சாணத்தைக் கூட மனிதன் மிதிக்கக்கூடாது என்கிற கண்டிப்புள்ளவர்.  அந்த சாணம்தான் நாளை திருநீராக போகிறது […]

Read More

மகாசேனா திரைப்பட விமர்சனம்

by on December 12, 2025 0

யானை வளர்க்கும் நாயகர்களை பற்றிய கதைகள் சமீபத்தில் தமிழ் படங்களில் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இதிலும் பழங்குடியின தலைவராக வரும் நாயகன் விமல் ஒரு யானையை வளர்க்கிறார். அதன் பெயர் சேனா. அந்த யானைக்கு திடீரென்று மதம் பிடித்து காட்டுக்குள் சென்று விடுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னொருநக்குழுவின் பகைமையும் விமலை, அவரது இனத்தையும் சூழ்ந்து நிற்கிறது. இது ஒரு புறம் இருக்க விமல் வசிக்கும் மலை கிராமத்து கோவிலில் இருக்கும் யாளிஸ்வரன் சிலையை வனத்துறை அதிகாரி […]

Read More

மகாசேனா – ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படம்.!

by on December 3, 2025 0

உலகமெங்கும் டிசம்பர் 12, 2025 அன்று வெளியாகும் மகாசேனா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 30ஆம் தேதி ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது. மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படமான மகா சேனா திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நவம்பர் 30ஆம் தேதி முன்னணி பத்திரிகை மற்றும் ஊடக நிபுணர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இசை ஆல்பம், முக்கியமான காட்சிகள் மற்றும் இந்தப் படத்தை […]

Read More

“விஜயகாந்த்துக்கு அடுத்ததாக விமல் தான்..!” – தேசிங்கு ராஜா-2 விழாவில் ஆர்.வி உதயகுமார்

by on July 1, 2025 0

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 […]

Read More

பரமசிவன் பாத்திமா திரைப்பட விமர்சனம்

by on June 7, 2025 0

தலைப்பே ஒரு விவகாரமான படம் இது என்பதை சொல்லிவிடுகிறது அல்லவா? அப்படித்தான் இருக்கிறது படத்துக்குள்ளும். மலை கிராமம் ஒன்றில் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் மோதல் ஏற்படுவதால் இரண்டு பகுதியினரும் ஒருவர் பகுதிக்குள் இன்னொருவர் நுழையக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கே அடுத்தடுத்து இருவர் கொல்லப்பட அதைத் துப்பறிய போலீஸ் உள்ளே வரும்போதுதான் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வருகிறது. நாயகன் விமலும் நாயகி சாயாதேவியும் இந்த கொலைகளைப் புரிகிறார்கள். ஆனால் யார் கண்ணுக்கும் […]

Read More

மொழி, இனப்பற்று என்னையும் இசக்கி கார்வண்ணனையும் இணைக்கிறது..! – சீமான்

by on May 27, 2025 0

*லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா* இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.  வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க […]

Read More

சார் திரைப்பட விமர்சனம்

by on October 17, 2024 0

சினிமாவுக்கு வாத்தியார் பெருமை சேர்த்தது ஒரு காலம். இது வாத்தியார்களைப் பெருமைப்படுத்தும் சினிமாப் படம். எல்லோருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்கிற அடிப்படையில் கிராமப்புறங்களில் பணி புரியும் வாத்தியார்களின் பங்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட். அத்துடன் கல்வி போதித்து அறியாமையைப் போக்குவது என்பது ஒரு தலைமுறையில் சாத்தியப்படக்கக்கூடிய விஷயம் அல்ல என்பதையும் மூன்று தலைமுறைக் கதை களாகச் சொல்லி ஆழமாக உணர்த்தியும் இருக்கிறார். ஆண்டான்களின் அடிமைகளாக […]

Read More

போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்பட விமர்சனம்

by on August 21, 2024 0

வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கும் நல்லது, கெட்டதுகளை சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் ஒரே ஒரு பயணத்தில் நமக்கு விளக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் மைக்கேல் கே.ராஜா. பிண ஊர்தி ஓட்டி வாழ்க்கை நடத்தும் விமல், அபலைப் பெண்ணான மேரி ரிக்கெட்ஸ்சுக்கு வாழ்க்கை கொடுக்க அதன் காரணமாக கர்ப்பமாகிறார் மேரி. இரண்டு முறை கர்ப்பம் தரித்து உயிரற்ற குழந்தைகளைச் சுமந்து மூன்றாவது தரிக்கும் கர்ப்பம் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த, அதற்காக பிரசவத்தைத் தன் வசதிக்கு மேலான […]

Read More

குலசாமி திரைப்பட விமர்சனம்

by on May 6, 2023 0

பாலியல் குற்றவாளிகளுக்கு சினிமாக்காரர்கள் தரும் தண்டனை மரண தண்டனை மட்டுமே. இதனை இன்னொரு முறை உரக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ‘குட்டிப்புலி’ ஷரவணஷக்தி. ஆட்டோ ஓட்டுனராக வரும் நாயகன் விமலின் தங்கை கீர்த்தனா மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து, தான் பிறந்த கிராமத்திற்கு பெருமை சேர்க்கிறார். தொடர்ந்து அவரை மருத்துவராக விரும்பிய விமல் அதற்கு போதிய பணமின்றி தவிக்க அந்த கிராமத்து மக்களே சேர்ந்து விமலின் தங்கையை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கிறார்கள். இத்தனைப் பாடுபட்டு தங்கையை மருத்துவராக […]

Read More

விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக்

by on May 5, 2022 0

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘தெய்வ மச்சான்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, […]

Read More
  • 1
  • 2