April 17, 2021
  • April 17, 2021
Breaking News

Tag Archives

தமன்னாவையும் விடாமல் தாக்கிய கொரோனா

by on October 4, 2020 0

படப்பிடிப்புகள் இந்தியாவில் தொடங்கிவிட்ட நிலையில் நடிக நடிகையர் மிகவும் கவனத்துடன் அதில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. படப் பிடிப்பில் ஈடுபடும் எல்லா தொழிலாளர்களுக்கும் இதே பாதுகாப்பு தேவை பட்டாலும் அவர்கள் மாஸ்க் அணிந்து பணி புரியலாம். ஆனால் நடிகர் நடிகையருக்கு மாஸ்க் அணிந்து நடிக்கும் வாய்ப்பு இல்லை. இந்நிலையில் ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்தில் இருந்த நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் […]

Read More

வெப்சீரீஸில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் தமன்னா வீடியோ

by on July 17, 2020 0

உலக அளவில் கூட எல்லா உச்ச நடிகர் நடிகைகளும் வெப்சைட்டில் நடிக்க வந்தாயிற்று. இதில் பாலிவுட் நட்சத்திரங்களும் அடக்கம். சமீபத்தில் தமிழில் உச்ச நட்சத்திரமான சூர்யாவும் சரத்குமாரும் கூட ஒவ்வொரு வெப்சீரிஸ் இல் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்களைத் தொடர்ந்து இப்போது நடிகை தமன்னாவும் ஒரு வெப்சைட்டில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது இந்தியும் தமிழும் அல்ல. மலையாளத்தில் தயாராகும் ஒரு வெப்சீரிஸ் இல் தமன்னா நடிக்க ஒத்துக் கொண்டு இருப்பதாக […]

Read More

வெப் சீரிஸ் போன தமன்னா வெகுண்டெழுந்த ஸ்ரீ ரெட்டி

by on December 31, 2019 0

இது வெப் சீரீஸ் சீசன். சினிமா நட்சத்திரங்கள் சினிமாவில் வாய்ப்பிழந்து போனால் அடுத்து அடைக்கலமாகும் இடமாக முன்பு டிவி சீரியல் இருந்தது. இப்போது அந்த இடத்தை வெப் சீரீஸ் ஆக்கிரமித்து இருக்கிறது. அப்படி சினிமாவில் தமிழ் தொடங்கி இந்தி வரை கோலோச்சிய தமன்னா, கடைசி கடைசியாக பேயாகவே நடித்து வந்தார். இனியும் விட்டால் சினிமாவில் தன்னை நிரத்தரப் பேயாக ஆக்கிவிடுவார்கள் என்று பயந்து அவரை நோக்கி வந்த வெப் சிரீஸை கபாலென்று பிடித்துக் கொண்டார். அப்படி அவர் […]

Read More

ஆக்‌ஷன் திரைப்பட விமர்சனம்

by on November 16, 2019 0

படத்தின் இயக்குநர் சுந்தர்.சி டைட்டிலை ரெடி பண்ணி விட்டு கதையை எழுதினாரோ, கதையை எழுதிவிட்டு டைட்டிலை முடிவு பண்ணினாரோ தெரியவில்லை. படத்துக்குள் ஆக்‌ஷன்தான் அதிரிபுதிரியாக இருக்கிறது.  அமைந்தால் இந்தப்படத்தில் வரும் விஷால் குடும்பம் போல் அமைய வேண்டும். அப்பா பழ கருப்பையா தமிழக முதல்வர். அண்ணன் ராம்கி துணை முதல்வர். விஷால் இந்திய ராணுவத்தில் அதிகாரி. மூவருக்குமான முக்கிய அடையாளம் எல்லோரும் வடிகட்டிய நல்லவர்கள் என்பது. நட்புக்காக 4000 கோடி ரூபாய் புராஜக்டை வின்சென்ட் அசோகனுக்கு ராம்கி […]

Read More

பெட்ரோமாக்ஸ் திரைப்பட விமர்சனம்

by on October 13, 2019 0

கே.ஆர்.விஜயாவை சினிமாவின் அம்மனாக ஆக்கியது போல, தமன்னாவை சினிமாவின் பேயாக ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது. ஏற்கனவே ‘தேவி’ படத்தின் இரண்டு பாகங்களில் பேயான இவரை இந்தப்படத்திலும் பேயாக்கி பயமுறுத்தப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன். அதனால், இனி தொடர்ந்து அவரைப் பல படங்களில் பேயாகப் பார்த்துவிடுவோமோ என்று ‘பயமாக’ இருக்கிறது. தங்கள் பூர்விக வீட்டை விற்றுவிட்டு மலேசியாவில் குடியேற நினைக்கும் பிரேம் அதற்கான வேலைகளில் இறங்க, அந்த வீட்டில் பேய்கள் இருப்பதாக நம்பி யாரும் அதை வாங்க […]

Read More

விஜய் கார்த்தியுடன் மோத தமன்னாவுக்கு என்ன தில் ?

by on September 19, 2019 0

வரும் தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகில்’ வரத் தயராகிக் கொண்டிருக்க, அந்தப்படத்துடன் கார்த்தி நடிக்கும் ‘கைதி’யும் வெளியாகவிருக்கிறது. கார்த்தியின் ‘கைதி’யை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜே விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் நிலையில் பிகிலை ஆதரிக்கும் விஜய் ரசிகர்கள் ‘கைதி’ படத்தைப் போட்டியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிற நிலையில் ‘கைதி’ வருவதில் பிரச்சினையில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழனு’ம் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளும் என்று ஆரம்பித்துக் கடைசியில் தீபாவளிக்கு முன்னதாகவே வெளிவரவிருக்கிறது. இந்நிலையில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் […]

Read More

எம்ஜிஆர் படக்கனவை நிறைவேற்றிய விஷால் – சுந்தர் சி

by on September 1, 2019 0

‘மத கஜ ராஜா’, ‘ஆம்பள’ படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சியும், விஷாலும் இணையும் மூன்றாவது படம் ‘ஆக்‌ஷன்’. இந்தப்படம் பற்றி சுந்தர்.சி சொன்னதிலிருந்து…. “நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். இப்போது விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும் , ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் ஆக்‌ஷன் படமாக்கப்பட்டது. அதேபோல் இதுவரை நான் இயக்கிய […]

Read More

துருக்கியில் பைக் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய விஷால்

by on March 28, 2019 0

சுந்தர். சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு துருக்கியின் கேப்படோச்சியா நகரில் நடந்து வருகிறது. விஷால் நாயகனாக அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க டிரைடன்ட் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்துக்காக 50 நாள்கள் ஷெட்யூல் துருக்கியில் திட்டமிடப்பட்டிருக்கிறது. அங்கே ஒரு பைக் துரத்தல் உள்ளிட்ட சண்டைக் காட்சியை சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்க, அதில் விஷால் நான் கு சக்கரங்கள் கொண்ட ஏடிவி வகை பைக்கில் வந்து கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் எதிர்பாராமல் அந்த பைக் தலைகுப்புற […]

Read More
  • 1
  • 2