July 30, 2026
  • July 30, 2026
Breaking News

Tag Archives

சூர்யாவின் டிவீட்டால் கோலிவுட்டில் அதிர்ச்சி அலை

by on February 7, 2021 0

கொஞ்ச நாள் முன்பு நடிகர் சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் வெகு விரைவிலேயே அந்த செய்தி நம்பகத்தன்மை அற்றது என்பது உறுதியானது. ஆனால், சற்று நேரத்துக்கு முன்பு அவரது மகனும் முன்னணி நடிகருமான சூர்யா வெளியிட்டிருக்கும் டிவீட் கோலிவுட்டில் மட்டுமல்லாது அவரது ரசிகர்கள் இடத்திலும் மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ட்விட்டில் அவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து குணம் அடைந்து இருப்பதாக […]

Read More

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஆஸ்கர் போட்டியில் பங்கேற்பு

by on January 26, 2021 0

இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் ‘சூரரைப் போற்று’. கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது. தற்போது ‘சூரரைப் போற்று’ படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம். அந்த வரிசையில் பொதுப்பிரிவில் […]

Read More

கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் போட்டியிடும் சூரரைப் போற்று

by on December 20, 2020 0

சுதா கொங்கரா இயக்கத்தில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்து நாயகனாக நடித்த தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று, 2020ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. உலகம் முழுவதும் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட சூரரைப் போற்று, தற்போது 78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிடவுள்ளது. இந்தச் சாதனை ஏன் இன்னும் விசேஷமானது என்றால், இந்த […]

Read More

அருண் விஜய்யின் மகனை தன் தயாரிப்பில் அறிமுகப்படுத்தும் நடிகர் சூர்யா

by on December 14, 2020 0

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மற்றும் RB Films S.R.ரமேஷ் பாபு, இணை தயாரிப்பு செய்கின்றனர். இப்படத்தை இயக்குபவர் சரோவ் சண்முகம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K […]

Read More

சூரரைப் போற்று திரைப்பட விமர்சனம்

by on November 12, 2020 0

‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படாதே’ என்பார்கள். ஆனால் கையில் இருப்பதை வைத்துக்கொண்டு தான் மட்டுமல்ல, தன்னைப்போன்ற எல்லா சாமானியர்களையும் பறக்க வைத்த ஒரு எளிய மனிதனின் சாதனைப் போராட்டம்தான் இந்தப்படம். ஆகாயத்தில் பறக்கும் மனித முயற்சியில் விமானக் கண்டுபிடிப்பு காலம் காலமாகக் கைக்கொள்ளப்பட்டு அத்தனை முயற்சிகளும் wrong ஆகப் போன நிலையில் அதை Right என்று ஆக்கியது ரைட் சகோதரர்களின் முயற்சி. ஆனாலும் கூட அந்த சாதனைப் பயணத்தை ஆதிக்க சக்திகள் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு […]

Read More

சூரரைப் போற்று பார்க்க இன்னும் சில மணி நேரங்களே…

by on November 10, 2020 0

அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள் இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக்கிறது. சூர்யா, மோகன் பாபு, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி ஆகியோர் இதில் நடித்திருக்கின்றனர். குறைந்த விலை விமான சேவையான ஏர் டெக்கானின் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் கற்பனைக் […]

Read More

சூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி

by on October 24, 2020 0

அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று திரைப்படம் முதலில் அக்டோபர் 29 அன்று வெளியாகவிருந்தது. ஆனால் படத்தை வெளியிட இந்திய விமானப் படையின் ஒப்புதலுக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் காத்திருந்தமையால் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப் பட்டது. இன்று, படத்தின் நாயகன் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதியை அறிவித்தார். மேலும் படத்தின் வெளியீட்டுக்காக என்ஓசி சான்று வழங்கிய இந்திய விமானப் படைக்கு நன்றி தெரிவித்தார். சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் “காத்திருப்பு முடிந்தது! வரும் […]

Read More

சூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா

by on October 22, 2020 0

சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கி சூர்யா நாயகனாக நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று ‘.  இப்படம் இந்திய விமானியின் சாதனையை பற்றியது. இதில் நடிப்பதற்காக சூர்யா தன் உடலை வருத்தும் மற்றும் பல்வேறு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடி இருக்கும் இந்த நேரத்தில் சூரரை போற்று படத்தை ஓ டி டி தளத்தில் வெளியிட முதலில் ஆர்வம் காட்டி வந்த சூர்யா பிறகு தியேட்டர்களிலும் அதனை வெளியிட […]

Read More

கபடதாரி முதல் பார்வையை சூர்யா வெளியிட்ட ரகசியம்

by on October 6, 2020 0

கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மூன்று நாட்களில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். தற்போது பின்னணி வேலைகளில் மும்முரம் காட்டி வரும் படக்குழுவினர், திரையரங்குகள் முழுமையாக திறந்த வுடன் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில், இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் ‘கபடதாரி’ படத்தின் ஹீரோ சிபிராஜுக்கு எதிர்பாராத பரிசு வழங்க நினைத்த ‘கபடதாரி’ படக்குழுவினர் படத்தின்  முதல் பார்வையை இன்று […]

Read More