September 13, 2026
  • September 13, 2026
Breaking News

Tag Archives

விஜய் அஜித் தங்கள் ரசிகர்களை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் – புதிய சங்கம் புகழ் பாரதிராஜா

by on August 10, 2020 0

ஏற்கனவே இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அதன் நிர்வாகத்திற்காக அரசு அனுமதித்துள்ள சிறப்பு அதிகாரியை கருத்தில் கொள்ளாமல் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்து பிற தயாரிப்பாளர்களின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் பாரதிராஜா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். விஜய் சூர்யாவுக்கு எதிராகக் கருத்துகளை பதிவிட்டு வரும் நடிகை மீரா மிதுனைக் கண்டிப்பது போல் அந்த அறிக்கை அமைந்திருந்தாலும் அதை உள்ளார்ந்து படித்து பார்த்தால் மீரா மிதுனை தட்டிக் கொடுப்பது போலவும் விஜய் […]

Read More

சூர்யா நடிக்கும் வெப் தொடருக்கான தலைப்பு வெளியானது

by on July 14, 2020 0

ஹாலிவுட் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் எல்லாம் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கியாகிவிட்டது இதில் கோலிவுட் மட்டும் விதிவிலக்கா என்ன? வெப்தொடர் ஒன்றில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு ’நவரசா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 9 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரை 9 இயக்குனர்கள் இயக்க உள்ளனர் என்றும், அதில் ஒரு எபிசோடை மணிரத்னம் இயக்கவுள்ளார் என்றும் தகவல். இந்த வெப்தொடர் மூலம் நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் இயக்குநராக அறிமுகமாக […]

Read More

சிவகுமார் மீது வழக்குப் பதிவு – திட்டமிட்டு தாக்கப் படுகிறதா சூர்யா குடும்பம்?

by on June 6, 2020 0

பொது ஊரடங்கு வந்தாலும் வந்தது எதை பிரச்சனைக்கு உள்ளாகலாம் என்று அலைபவர்களுக்கு தோதான நேரம் கிடைத்திருக்கிறது. யாரோ எப்போதோ பேசிய பேச்சுக்களை எல்லாம் தோண்டி எடுத்து அதன் மீதான விமர்சனங்களையும் தாக்குதல்களையும் தொடர்வது இப்போது வாடிக்கையாகி வருகிறது. அதிலும் சிலர் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள் அதில் சூர்யாவின் குடும்பம் ஒன்று. ஒரு படத்தில் விழாவில் ஜோதிகா தஞ்சாவூர் கோவில் பற்றி பேசிய பேச்சை தூசு தட்டி எடுத்து பெரிதுபடுத்தி பிரச்சனைக்கு உள்ளாக்கினார்கள். விஷயம் தெரிந்தோர் அப்படி […]

Read More

2 கோடி பார்வைகளைக் கடந்தது அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ டிரெய்லர்

by on May 28, 2020 0

ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது […]

Read More

நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கவில்லை – தெளிவுபடுத்தும் சூர்யா

by on May 27, 2020 0

‘பொன்மகள் வந்தாள் ‘ படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவது ஏன் என்பது குறித்து சூர்யா அளித்திருக்கும் ஜூம் பேட்டியில், “தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. எனவே மாற்று வழியை நோக்கி நகர்வது மிகவும் அவசியமானதாகும். குறிப்பாக மாற்று சினிமாக்களுக்கு ஓடிடி நல்ல தளமாக உள்ளது. இதனால் நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல. திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தள்ளி […]

Read More

நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்வோம் – சூர்யா அறிக்கை

by on April 28, 2020 0

ஒரு விழாவில் நடிகை ஜோதிகா கோவிலையும் கல்விக் கூடங்களையும் ஒப்பிட்டு பேசிய விஷயம் இன்றைக்கு ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கிறது பெரும் விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து ஜோதிகாவின் கணவரும் முன்னணி நடிகருமான சூர்யா வெளியிட்டிருக்கும் அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.

Read More

கமல் கனவை நிறைவேற்றிய சூர்யா – பொன்மகள் வந்தாள் விவகாரம்

by on April 25, 2020 0

2013 ஆம் ஆண்டு கமல்ஹாசன் டிஜிட்டல் தளத்தில் ‘விஸ்வரூபம்’ படத்தை நேரடியாக திரையிடும் முயற்சியில் இறங்கினார். ஆனால், அதற்கு எதிராக ஒட்டுமொத்த திரையரங்குகளும் எதிர்ப்பு தெரிவித்து கமலஹாசனின் முயற்சியை முறியடித்தனர். தயாரிப்பாளர் சங்கமும் அப்போது கமலுக்கு உதவி செய்யவில்லை. அங்கே ‘கட்’ செய்து இங்கே வந்தால் இப்போது சூர்யாவிற்கு சொந்தமான 2Dநிறுவனத்தின் தயாரிப்பில் மார்ச் மாதம் வெளியாக இருந்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 25) […]

Read More

சூர்யா கார்த்தி சிவகுமாரைத் தொடர்ந்து பெப்ஸிக்கு சிவகார்த்திகேயன் உதவி

by on March 23, 2020 0

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வாரம் முதல் மார்ச் 31ம் தேதி வரை படப்பிடிப்புகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டதன் விளைவாக சினிமா சங்கங்களின் கூட்டமைப்பான பெப்ஸியைச் சேர்ந்த சுமார் 25,000 தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கியுள்ளனர். அவர்களில் 15,000 பேரின் வாழ்வாதாரம் அன்றாடம் படப்பிடிப்பு நடந்தால் மட்டுமே என்று இருக்க, டிவி தொடர்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு விட மிகவும் பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதனால் பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி இன்று நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாவினால் வளர்ச்சி […]

Read More

சூர்யாவுக்கு ஆப்பிளில் கதை எழுதும் ஹலிதா ஷமீம்

by on February 24, 2020 0

கடந்த வருட இறுதியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்ற படம் சில்லுக்கருப்பட்டி. நான்கு வெவ்வேறு சூழல், பருவங்களை உள்ளடக்கிய காதல் கதைகளைக் கொண்டிருந்த இந்தப்படத்தைப் பார்த்து சொக்கிப் போன சூர்யா இந்தப்படத்தைத் தன் சொந்த பேனரில் வெளியிட்டு படத்துக்கு எதிர்பாராத கவனிப்பு ஏற்படச் செய்தார். இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சுனைனா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்த இந்த படத்தை ஹலிதா ஷமீம் இயக்கி இருந்தார். சூர்யாவின் தலையீட்டில் இந்த படம் ரசிகர்களைச் சென்றடைந்து நல்ல […]

Read More