October 15, 2025
  • October 15, 2025
Breaking News

Tag Archives

ரஜினி சார்தான் சாருகேசி நாடகத்தை படமாக எடுக்க முதலில் சொன்னவர்..! – சுரேஷ் கிருஷ்ணா

by on June 23, 2025 0

*சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!* சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள் மற்றும் வசனம் பா. விஜய் எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் […]

Read More

வெங்கட் பிரபு – ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்து வெளியிட்ட ‘மெட்ராஸ் மேட்னி ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

by on May 14, 2025 0

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  இயக்குநர் […]

Read More

பேபி & பேபி திரைப்பட விமர்சனம்

by on February 15, 2025 0

“அதென்ன பேபி & பேபி..?” என்று யோசிக்கிறீர்களா? கதைப்படி இரண்டு பேபிகள் தான் படத்தை நகர்த்திச் செல்கின்றன. எனவேதான் பேபி & பேபி..! ஒரு பக்கம் பெரிய ஜமீன்தாராக இருக்கும் சத்யராஜ் தன் மகன் ஜெய்க்கு பெரிய இடத்தில் திருமணம் முடித்து தன் ஜமீனைக் கட்டி ஆள அவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அப்பாவின் விருப்பத்திறகு மாறாக காதல் திருமணம் புரியும் ஜெய், சத்யராஜின் கோபத்துக்கு ஆளாகி வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். […]

Read More

ரஜினி பாரதிராஜா போலவே சத்யராஜ் சாரிடமும் நிறைய கற்றுக் கொண்டேன் – வசந்த் ரவி

by on May 19, 2024 0

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் பேசியதாவது, “இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. […]

Read More

அங்காரகன் திரைப்பட விமர்சனம்

by on September 10, 2023 0

நவ கோள்களில் செவ்வாய் கிரகத்துக்கு பெயர்தான் அங்காரகன். ஆனால் படத்தில் அந்த செவ்வாய் கோளுக்கும், கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வாழ்ந்து மறைந்த ஒரு மனிதன்தான் அங்காரகன். அவன் பேயாக மாறி மக்களை அபேஸ் செய்கிறான் என்கிற நம்பிக்கைதான் லைன். குறிஞ்சி மலையில் அமைந்த ஒரு இயற்கை எழில் வாழ்ந்த தங்குமிடம். அங்கே பல பேர் வந்து தங்கிச் செல்லும் சூழலில் ஒரு பெண் மாயமாவது தெரிய வருகிறது.  அதை விசாரிக்க வருகிறார் காவல் அதிகாரியான சத்தியராஜ். […]

Read More

சூப்பர் ஸ்டார் பிரச்சினையை சூப்பராக முடித்து வைத்த சத்யராஜ்

by on August 20, 2023 0

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான் ; அங்காரகன் விழாவில் சத்யராஜ் அதிரடி பேச்சு…   வில்லன் இல்லையென்றாலும் வில்லங்கம் இருக்க வேண்டும் ; அங்கராகன் விழாவில் சத்யராஜ் ஓபன் டாக்   ஒண்ணரை மொழி மட்டுமே எனக்கு தெரியும் ; அங்காரகன் விழாவை கலகலக்க வைத்த சத்யராஜ் ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். […]

Read More

தீர்க்கதரிசி படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட்தான் – சத்யராஜ்

by on February 20, 2023 0

Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘தீர்க்கதரிசி’. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இவ்விழாவினில்  இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது.., இந்த படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்த […]

Read More

நயன்தாராவின் கனெக்ட் படத்தில் ஆன்லைனில் பேயோட்டும் அதிசய சாமியார்

by on December 8, 2022 0

நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் ‘கனெக்ட் ‘ படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யராஜ், இந்தி நடிகர் அனுபம்கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் குறித்து பேசினார் இயக்குநர் அஸ்வின் சரவணன்… “இதுவும் ஆவி சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் வழக்கமான ஆவி கதைகளில் இருந்து இந்தப்படம் மாறுபட்டது.கொரோனா ஊரடங்குக் காலத்தில் எல்லோரும் தனித்தனியாக வீட்டுக்குள் இருந்த காலகட்டத்தில் நடப்பது […]

Read More

சூர்யாவுக்கு வழங்கப்பட்ட இரு பட்டங்கள் ‘நடிப்பு நாயகன்’, ‘புரட்சி நாயகன்’ – ET விழா கலகலப்பு

by on March 2, 2022 0

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா. […]

Read More

தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் திரை விமர்சனம்

by on January 1, 2022 0

பாலியல் வன்முறை செய்தவர்களை பழி வாங்கும் கதைகள் இந்திய படங்களில் நிறையவே வந்துள்ளன. அவற்றில் காமுகர்களை பிடித்துவந்து கொல்வதில் தொடங்கி அவர்களின் ஆணுறுப்பை அறுப்பது வரை பலவிதமான கதைகள் இங்கே சொல்லப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட கதைகள் எல்லாமே சட்டப்படி தவறானவை என்றாலும் அவை மக்களிடம் வரவேற்பு பெறுவதற்கு காரணம், சட்டப்படி அப்படிப்பட்ட குற்றத்துக்கு நீதி மன்றம் சென்றால் நீதி தாமதப்படுவதும் மறுக்கப்படுவதும்தான். அப்படியே தாமதப்பட்டு நீதி கிடைத்தாலும் அதன் தண்டனை மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. ஆனால் பாலியல் […]

Read More