July 11, 2025
  • July 11, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வெங்கட் பிரபு – ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்து வெளியிட்ட ‘மெட்ராஸ் மேட்னி ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!
May 14, 2025

வெங்கட் பிரபு – ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்து வெளியிட்ட ‘மெட்ராஸ் மேட்னி ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

By 0 48 Views

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொண்டது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இப்படத்தின் டைட்டிலுக்கான காணொளி நடிகர் சத்யராஜின் குரலிலும், தோற்றத்திலும் வெளியிடப்பட்டு.. ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்களின் கதாபாத்திரமும், அவர்களது திரைத்தோற்றமும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.