September 15, 2025
  • September 15, 2025
Breaking News

Tag Archives

60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியீடு – டிரைலர் இணைப்பு

by on August 18, 2018 0

கலைப்புலி எஸ். தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் ராதா மோகன் இயக்கி ரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட படம் ’60 வயது மாநிறம்’. வழக்கமாக எஸ்.தாணு தன் படங்களின் பூஜையையே பிரமாண்டமாக நடத்தக் கூடியவர். ஆனால், படப்பிடிப்பு முடியும்வரை இந்தப்படம் வெளியே தெரியாமலேயே நடந்து முடிந்தது. கேட்டால், “இந்தப் படத்தைத் திட்டமிட்டதே அப்படித்தான்..!” என்கிறார் தாணு. பிரகாஷ்ராஜ் முதன்மைக் காதாபாத்திரம் ஏற்கும் இந்தப்படத்தில் விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ’60 வயது மாநிறம்’ […]

Read More

கலைஞர் ஒரு ‘ஆண் தேவதை’யாக ஆசீர்வதிப்பார்..!

by on August 10, 2018 0

சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குனர் தாமிராவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான ‘ஆண் தேவதை’ படத்தின் இசை வெளியீடு இன்று 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழின தலைவர் கலைஞர் இயற்கை எய்த இந்த நேரத்தில் நிகழ்ச்சி வேண்டாம் என்று படக் குழுவினர் ஒருமித்தமாக கூடி முடிவு செய்தனர். இது குறித்து ‘ஆண் தேவதை’ திரைப்படத்தின் திரை அரங்கு விநியோக உரிமை பெற்ற நியூ ஆர். எஸ். எம். பிலிம் […]

Read More

கோலிசோடா2 விமர்சனம்

by on June 15, 2018 0

கோலிசோடா முதல் பாகத்தில் நடித்த வாண்டுகள்தான் இந்த பாகத்திலும் நடித்திருக்கிறார்களா, அல்லது அந்தக் கதை நாயகர்கள் வளர்ந்தவுடன் நடக்கும் கதையா என்று ஏகப்பட்ட கேள்விகள் படம் பார்க்கப் போகும் முன்னே எழுவது தவிர்க்க இயலாதது. இவை இரண்டும் இல்லாமல்… ஆனால், முந்தைய கதைக் கருவின் தொடர்ச்சி என்று வேண்டுமானால் இதைச் சொல்லலாம். வாழ்வின் அடையாளத்தைத் தேட முற்படும் இளைஞர்களுக்கு எது தடையாக நிற்கிறது. அதை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதைக்களம். முன்னாள் காவலரான சமுத்திரக்கனி ஒரு […]

Read More

சம்பளம் வாங்காமல் நடித்த சமுத்திரக்கனி

by on June 11, 2018 0

கௌதம் மேனனை நல்ல இயக்குநராகத் தெரியும். ஆனால், அவரை நடிகராக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் தனது கோலிசோடா2 பத்தின் மூலம் என்பது தெரிந்திருக்கும். ‘ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோலி சோடா 2.வில் சமுத்திரகனியுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் கௌதம் மேனன்., இவர்களுடன் பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் […]

Read More