January 23, 2025
  • January 23, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 50 கோடி வசூலுடன் நட்சத்திர வாரிசுகள் நடித்த தெலுங்குப் படம் தமிழுக்கு வருகிறது
November 29, 2018

50 கோடி வசூலுடன் நட்சத்திர வாரிசுகள் நடித்த தெலுங்குப் படம் தமிழுக்கு வருகிறது

By 0 1126 Views

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலாவின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த ‘ஹலோ’ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார்.

கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் – லிஸியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’, சூர்யா நடித்த ’24’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம்.கே.குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

பாகுபலி படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யாகிருஷ்ணன். மற்றும் ஜெகபதிபாபு, அஜய், சத்யகிருஷ்ணா, அனீஸ்குருவில்லா, வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தை உலகமுழுவதும் வெளியிடுகிறார் ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி.

Hello

படம் பற்றி நாயகன் அகில்…

நான் குழந்தையாக நடித்த ‘சுட்டிக் குழந்தை’ படத்தை வெற்றிபெறச் செய்த தமிழக மக்கள் மீது எப்பொழுதும் எனக்கு மதிப்பு உண்டு. அதே போல் என் அம்மா தமிழ் படத்தில் அறிமுகமாகிதான் புகழ் அடைந்தார்.

இந்த ஹலோ படம் நான் கதாநாயகனாக நடித்துள்ள படம். இந்த படத்தையும் தமிழ் ரசிகர்கள் பெரும் வெற்றிபெற செய்வார்கள் என்று நம்புகிறேன். என் நன்றியை தமிழ் ரசிகர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

ரொமாண்டிக் ஆக்ஷன், திரில்லர் கலந்த பக்கா கமர்ஷியல் சினிமா இது. இந்த படத்தின் பிரமாண்டமான சண்டை காட்சிகளுக்காக இங்குள்ள ஸ்டன்ட் கலைஞர்களுடன் தாய்லாந்து ஸ்டன்ட் கலைஞர்களும் சேர்ந்து பணியாற்றி உள்ளனர். படத்தின் ஐந்து பாடல்களும் சிறப்பாக வந்திருக்கிறது.

படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது..!” என்கிறார்.

கலக்குங்க நட்சத்திர வாரிசுகளா..!.