February 16, 2025
  • February 16, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியீடு – டிரைலர் இணைப்பு
August 18, 2018

60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியீடு – டிரைலர் இணைப்பு

By 0 1311 Views

கலைப்புலி எஸ். தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் ராதா மோகன் இயக்கி ரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட படம் ’60 வயது மாநிறம்’.

வழக்கமாக எஸ்.தாணு தன் படங்களின் பூஜையையே பிரமாண்டமாக நடத்தக் கூடியவர். ஆனால், படப்பிடிப்பு முடியும்வரை இந்தப்படம் வெளியே தெரியாமலேயே நடந்து முடிந்தது. கேட்டால், “இந்தப் படத்தைத் திட்டமிட்டதே அப்படித்தான்..!” என்கிறார் தாணு.

பிரகாஷ்ராஜ் முதன்மைக் காதாபாத்திரம் ஏற்கும் இந்தப்படத்தில் விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

’60 வயது மாநிறம்’ படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரைப் பாராட்டியதுடன் எல்லோரும் பார்க்கும் வண்ணம் ‘யு’ சான்றிதழ் வழங்கியிருப்பது பெருமைக்குரியது.

இப்படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. “நான் தயாரித்த படங்களில் பாரதிராஜா இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’ எனக்குப் பெற்றுத்தந்த பெயரைப் போல் இந்தப்படமும் பெற்றுத்தரும்..!” என்கிறார் தயாரிப்பாளர் தாணு.

பிரகாஷ்ராஜ் நடிப்பு இன்னொரு தேசிய விருதை அவருக்குப் பெற்றுத்தர வல்ல ’60 வயது மாநிறம்’ படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு. கீழே டிரைலர்…