March 18, 2025
  • March 18, 2025
Breaking News
December 24, 2018

விஸ்வாசம் – எல்லா வயதினரும் பார்க்க அனுமதி

By 0 1049 Views

அஜீத் ரசிகர்களுக்கு இந்த செய்தி இன்னொரு மகிழ்ச்சியைத் தரும். பொங்கலன்று வெளியாகவிருக்கும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு எல்லா வயதினரும் பார்க்கக்கூடிய ‘யு’ சான்றிதழை தணிக்கைக் குழுவினர் வழங்கியுள்ளனர்.

“எங்களது சத்யஜோதி பிலிம்ஸ் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களைத் தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘U’ சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

நாயகன் அஜித் குமாருக்கும், இயக்குனர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. எல்லா தரப்பினரையும் கவரும் படமாக ‘விஸ்வாசம்’ அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இசை அமைப்பாளர் டி இமானின் இசை பொங்கல் கொண்டாடத்துக்குப் பொருத்தமாக பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. மாநகரம் முதல் குக்கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட்” என்கிறார் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்.

அஜித் குமார், நயன்தாரா,விவேக், தம்பி ராமையா, யோகி பாபு ,ரமேஷ் திலக், அனைக்கா, கோவை சரளா உட்பட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்து இருக்கும் ‘விஸ்வாசம் படத்துக்கு வெற்றி. டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாட ரசிகர்கள் தயாராகலாம்.!