September 16, 2024
  • September 16, 2024
Breaking News
June 11, 2018

சம்பளம் வாங்காமல் நடித்த சமுத்திரக்கனி

By 0 1094 Views

கௌதம் மேனனை நல்ல இயக்குநராகத் தெரியும். ஆனால், அவரை நடிகராக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் தனது கோலிசோடா2 பத்தின் மூலம் என்பது தெரிந்திருக்கும்.

‘ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோலி சோடா 2.வில் சமுத்திரகனியுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் கௌதம் மேனன்., இவர்களுடன் பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கௌதம் மேனன்…

“நிறைய பேர் என்னை நடிக்கக் கேட்டிருக்காங்க. ஆனால், விஜய் மில்டன் என்னை நடிக்க கூப்பிட்டபோது தட்ட முடியலை. “யாரெல்லாம் நடிக்கிறாங்க..?”ண்னு கேட்டேன். “சமுத்திரக்கனி மட்டும்தான் நடிக்கிறார், மத்தவங்க எல்லாரும் புதுமுகம்..!” என்றார்.

யாருக்கும் யோசிக்காமல் உதவிகளை செய்பவர் சமுத்திரகனி. அவர் எனக்கும் பல உதவிகளைச் செய்திருக்கிறார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பல இளைஞர்களுடன் வேலை செய்தது நல்ல அனுபவம்..!” என்றார்.

“கோலி சோடா மாதிரி இது இல்லைனு மக்கள் சொல்லிட கூடாதுண்னு நினைச்சி கவனமாதான் இந்தப் படத்தை எடுத்திருக்கோம். கோலி சோடாவுக்கு உதவிய பாண்டிராஜ், லிங்குசாமிக்கு நன்றி.

Golisoda2

Golisoda2 Press Meet

கோலி சோடா முதல் பாகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்ச அடையாளம் கிடைக்கணும் என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறோம். இதில் அவர்களுக்கு கிடைத்த அடையாளம் அடுத்த நிலைக்குப் போக விடாமல் என்னென்ன தடுக்குதுங்கிறதைப் பற்றி பேசியிருக்கிறோம்.

நான் கதை சொல்லிய, 4 மணி நேரத்தில் அச்சு பொண்டாட்டி பாடலை போட்டுக் கொடுத்தார். படத்தின் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக இருக்கும். அச்சுவை அடுத்து சண்டைக்காட்சிகளை அமைத்த சுப்ரீம் சுந்தர் சிறப்பாக பேசப்படுவார்.

சமுத்திரகனி ரியல் லைஃபில் நெஞ்சை நிமிர்த்தி, துணிச்சலாக இருப்பவர். ஆனால், படத்தில் தோல்வியடைந்த ஒரு மனிதராக, வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கார். இதுவரை ஒரு பைசா சம்பளம் வாங்காமல் நடிச்சுக் கொடுத்தார். கௌதம் மேனன் சார் நடிச்ச காட்சிகளை பார்த்து நானே மிரண்டு போயிட்டேன். மிகச்சிறப்பாக வந்திருக்கு அவர் நடிப்பு..

விளம்பரம் செய்யும் செலவை விட்டுட்டு, ஜிஎஸ்டி வண்டி என்ற ஒரு விஷயத்தை ஆரம்பிச்சோம். அந்த வண்டியில் மோர், இளநீர், உணவு என மக்களுக்குத் தேவையான விஷயங்களைக் கொடுப்போம்னு முடிவு செஞ்சோம். சென்னை உட்பட 6 ஊர்களில் 12 வண்டிகள் ஓடுது. என்றார் இயக்குனர் விஜய் மில்டன்.

படமும் அப்படி ஓடட்டும் மில்டன் சார்..!