September 15, 2025
  • September 15, 2025
Breaking News

Tag Archives

இமயம் சென்று திரும்பிய ரஜினி உற்சாக வரவேற்பு வீடியோ

by on October 19, 2019 0

சன் பிக்சர்ஸுகாக ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாக இமயமலைக்கு ஒரு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்று வந்தார் ரஜினி.  அது அவருக்கு மன அமைதியையும், ஆன்ம பலத்தையும் தருவதாக அவர் நம்பிக்கை. அந்தப்பயணம் முடிந்து நேற்று சென்னை திரும்பிய ரஜினிக்கு விமானநிலையத்தில் உற்காச வரவேற்பு அளிக்கப்பட்டது.  அப்போது பேட்டியளித்த அவர், “ஈமயமலை பயணம் நன்றாக இருந்தது…” என்றார்.  ஆர்வமிகுதியில் ஒரு ரசிகர் எடுத்து ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ கீழே…  #WelcomeBackTHALAIVA பிழிஞ்சிட்டாங்க தலைவர. நாம அங்க […]

Read More

ஹீரோ ஆக்கிய கலைஞானத்துக்கு வீடு வாங்கித்தந்த ரஜினி

by on October 7, 2019 0

சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தன்னை ஹீரோவாக்கிய கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருவேன் என்று பொது மேடையில் ரஜினி சொல்லி இருந்தார் இல்லையா?   அப்படிச் சொன்னபடி வீடு வாங்கிக் கொடுப்பதில் கலைஞானத்தைவிட தீவிரமாக இருந்தார் ரஜினி. அந்த விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு செக் போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத்தான் ‘தர்பார்’ படப்பிடிப்பிற்குச் சென்றாராம் ரஜினி.   அதன்படி கடந்த 5.10.2019 வெள்ளியன்று… அமுதினி ஃபிளாட்ஸ், 34, விநாயகம் தெரு, […]

Read More

சிரிக்க வைத்த கிரேஸி மோகன் அழவைத்து சென்றார்

by on June 10, 2019 0

தன் இணையற்ற நகைச்சுவை எழுத்துகள் மூலம் கடந்த முப்பது ஆண்டுகளாக சிரிக்க வைத்த கிரேஸி மோகன் தன் 66 வயதில் மாரடைப்பால் இன்று பிற்பகல் காலமானார். நெஞ்சு வலி காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக 2 மணிக்கு மருத்துமனை நிர்வாகம் அறிவித்தது. பொறியியல் பட்டதாரியான கிரேஸி மோகன், எஸ்.வி.சேகருக்காக ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ நாடகம் எழுதி மேடைக்கு அறிமுகமானார். அதன் மூலம் சாதாரண மோகனாக […]

Read More

ரஜினி தர்பார் மும்பையில் தொடக்கம் கேலரி + வீடியோ

by on April 10, 2019 0

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 167வது படமான தர்பார் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியது. தொடக்கவிழா பூஜையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கலந்து கொண்டனர். முழுக்க மும்பையில் படமாக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் ஏற்க, இசையை அனிருத் இசைக்கிறார். படத்தின் தொடக்கவிழா வீடியோ…   தொடக்க விழா கேலரி கீழே…

Read More

தர்பார் டிசைனே காப்பியா உடைக்கும் நெட்டிசன்கள்

by on April 9, 2019 0

ஒருவருக்கு சினிமா சாப்பாட்டில் பெயர் எழுதியிருக்கிறதென்றால் அதை யாராலும் மாற்ற முடியாது. அதேபோல் பெயர் எழுதவில்லையென்றால் எத்தனை பெரிய அறிவாளியானாலும் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பார்கள். இதை நம்புகிறீர்களோ இல்லையோ, நிஜத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. படத்துக்குப் படம் கதைத் திருட்டில் சிக்கிக் கொள்ளும் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த ‘கத்தி’, ‘சர்கார்’ படங்களில் சிக்கிக்கொண்டு வில்லங்கத்துக்குள்ளான கதை ஊருக்கே தெரியும். இருந்தும் அடுத்து அதைவிடப் பெரிய படமான ரஜினி படம் அவருக்குக் கிடைக்க அதன் படப்பிடிப்பு நாளை மும்பையில் […]

Read More

பூமராங் டிரைலர் பாடல் பார்த்து எக்சலண்ட் சொன்ன ரஜினி-கண்ணன் நெகிழ்ச்சி

by on March 7, 2019 0

நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள பூமராங் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது. இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரவலான வெளியான நிலையில் நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கண்களுக்கும், செவிகளுக்கும் இந்த செய்தி போனது. உடனே ஆர்.கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் கண்ணன். அதுபற்றிக் கேட்டபோது அவர் மனம் திறந்தார். “ரஜினி சாரிடமிருந்து […]

Read More

இளையராஜா என்னைவிட கமலுக்குதான் அதிக ஹிட் கொடுத்திருக்கார் – ரஜினி பேச்சு

by on February 3, 2019 0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பிரமாண்டமாக நடத்தும் ‘இளையராஜா 75’ இசை விழாவின் நிறைவு நாளான இன்று இளையராஜாவே இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமாவின் உச்ச பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.    உற்சாகமாக வந்து கலந்து கொண்ட ரஜினியின் பேச்சிலிருந்து…   “கலைகள் அத்தனையிலும் சிறந்தது இசைக் கலைதான். மற்ற கலைகளுக்கெல்லாம் முதன்மையாக இருப்பதும் இசைக் கலைதான். அதனால் இசைக் கலைஞர்கள் மீது எனக்கு மரியாதை அதிகமாக இருக்கும்.   […]

Read More