March 24, 2025
  • March 24, 2025
Breaking News
February 3, 2019

இளையராஜா என்னைவிட கமலுக்குதான் அதிக ஹிட் கொடுத்திருக்கார் – ரஜினி பேச்சு

By 0 1544 Views
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பிரமாண்டமாக நடத்தும் ‘இளையராஜா 75’ இசை விழாவின் நிறைவு நாளான இன்று இளையராஜாவே இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமாவின் உச்ச பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். 
 
உற்சாகமாக வந்து கலந்து கொண்ட ரஜினியின் பேச்சிலிருந்து…
 
“கலைகள் அத்தனையிலும் சிறந்தது இசைக் கலைதான். மற்ற கலைகளுக்கெல்லாம் முதன்மையாக இருப்பதும் இசைக் கலைதான். அதனால் இசைக் கலைஞர்கள் மீது எனக்கு மரியாதை அதிகமாக இருக்கும்.
 
சில லிங்கம் நீரில் உருவாகும், சில லிங்கம் மனிதனால் உருவாக்கப்படும், சுயம்புவாகவும் சில லிங்கம் உருவாகும்.  இளையராஜா சுயம்பு லிங்கம் போன்றவர். அது அபூர்வமாகவே உருவாகும். அது வெளிப்படும் போது அதன் சக்தியும், அதிர்வும் அபாரமாக இருக்கும்.
 
Shruthi, Kamal, Kameela Nasser

Shruthi, Kamal, Kameela Nasser

திரைத்துறைலக்காக தியாகம் செய்தவர் இளையராஜா. இசையமைப்பாளர்களுக்கு ஆண்டவன் ஆசீர்வாதமும் நம்மை இயக்கும் சக்தியும் உண்டு. 

 
‘அன்னக்கிளி’யில் ஆரம்பித்த அந்த அபூர்வ சக்தியை இப்போது வரை பார்க்கிறேன். நான் அவரை “சார்…”னுதான் கூப்பிடுவேன். திடீர்னு ஒருநாள் பேண்ட் சர்ட்டிலிருந்து வேட்டி ஜிப்பாவுக்கு மாறினார். அந்த நிமிஷத்துல இருந்து அவரை “சாமி…”னு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன். என்னை, அவரும் “சாமி…”னுதான் கூப்பிடுகிறார்.
 
‘மன்னன்’ படத்தில் என்னைப் பாட வச்சார், எனக்கு நிறைய  பாடல் போட்டிருக்கார். ஆனால், என்னை விட கமலுக்குதான் நிறைய ‘ஹிட்’ பாடல் கொடுத்திருக்கார்.
 
(இதை ரஜினி சொன்னதும், குறுக்கிட்ட இளையராஜா, “இவர் இப்படி சொல்றார், கமலைக் கேட்டா, ரஜினிக்கு போட்ட மாதிரி எனக்கு ஏன் பாட்டு போட மாட்டேங்கிறீங்க என சொல்வார்..!” என பதில் தந்தார். பிறகு மேடைக்கு வந்த கமல்ஹாசனும் அதை ஆமோதிப்பது போல பேசினார்…)
 
மகள் ஸ்ருதியுடன் வந்திருந்த கமல், அவருடனேயே மேடையில் இளையராஜாவின் இசையில் பாடியது ஹைலைட்..!