September 15, 2025
  • September 15, 2025
Breaking News

Tag Archives

மனைவி ரஜினியைப் பிரிந்தார் விஷ்ணு விஷால்

by on November 13, 2018 0

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தன்னகென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் இவர் நடித்த ‘ராட்சசன்’ பெரிய வெற்றியைப் பெற்றது. ஏழு வருடங்களுக்கு முன் நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜின் மகள் ரஜினியைக் காதலித்து மணம் புரிந்தார் அவர். அவர்களுக்கு ஆர்யா என்ற மகன் இருக்கிறான். இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஒருவருடமாக மனைவியைப் பிரிந்திருந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கிறார். மனமொத்து இந்த முடிவை மேற்கொண்டதால் இருவரும் […]

Read More

சர்கார் அடுத்து 2.O வுக்கு சவால் விடும் தமிழ்ராக்கர்ஸ்

by on November 10, 2018 0

தமிழ்சினிமாவின் தீராத தலைவலியாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் அடுத்தடுத்து புதிய படங்களைத் தன் தளத்தில் வெளியிட்டு வருகிறது. தீபாவளிக்கு வெளியான சர்காரை அன்றே வெளியிடுவோம் என்று அறிவித்து அதன்படியே வெளியிட்டது. சினிமாவுக்குள் விரலை உயர்த்தி முஷ்டியை மடக்கி உலகுக்கே சவால் விடும் ஹீரோக்களாலும், தங்கள் சாதுர்யத்தால் அரசியலைப் பிரித்து மேயும் இயக்குநர்களாலும் கூட தமிழ் ராக்கர்ஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர்கள் சங்க செயலாளருமான விஷாலின் தலையாய கொள்கைகளில் ஒன்றே இந்த தமிழ் ராக்கர்ஸை முடக்குவதுதான். […]

Read More

ரசிகர்களுக்கு நேரில் தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி – கேலரி

by on November 6, 2018 0

இன்று தீபாவளித் திருநாளை ஒட்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் வழக்கம்போல் போயஸ் கார்டனில் அவர் இல்லத்துக்கு வாழ்த்துப்பெற சென்றனர். இந்த வருடம் அவர் வீட்டில் இருந்ததால் ரசிக, ரசிகைகளை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக் கூறினார். அந்தப் புகைப்படங்கள் கீழே. அடுத்தடுத்து சொடுக்கிப் பாருங்கள்…  

Read More

இறங்கியாச்சு இன்வெஸ்ட் பண்ணியாச்சு வந்தா ஷ்யூரா அடிக்கவேண்டியதுதான் – ரஜினி

by on November 3, 2018 0

இந்தியாவின் பிரமாண்டப் படமாகக் கூறப்படும் 2.ஓ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப் பட்டது. இந்தப் படம் 3டியில் உருவாக்கப்பட்டிருந்தாலும் உலகிலேயே முதல்முறையாக 4டி எஸ் எல் ஆர் என்ற புதிய ஒலி நுட்பத்தில் உருவாக்கப் பட்டிருக்கிறது. இதுபற்றி ஷங்கர் கூறும்போது…. “3டி ஒலிநுட்பம் இடம் வலம் மேலே ஒலி கேட்கும் அளவில் இருக்கும். 4டி என்பது கால்களுக்கு கீழும் ஒலி கேட்கும். இதைத் தமிழ் படத்தில் கொண்டு வர வேண்டும் என்ற கனவு இருந்தது. அது இதில் […]

Read More

ரஜினியின் 2.o பட டிரைலர் பற்றி ஷங்கர் அறிவிப்பு

by on October 28, 2018 0

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கிடக்கும் ஷங்கர் – ரஜினி – அக்க்ஷய் குமார் காம்பினேஷனில் உருவாகும் 2.ஓ படத்தின் முதல் பார்வை மற்றும் டீஸர் இந்திய சினிமா ரசிகர்களைக் கவர்ந்து டிரென்டிங்கில் கலக்கியது. இந்நிலையில் படத்தின் டிரைலரைப் பார்க்க அத்தனைபேரும் ஆவலாகக் காத்திருக்கும் நிலையில் அதற்கான முன்னறிவிப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அதன்படி நவம்பர் 3-ம்தேதி படத்தின் டிரைலர் அதிரடியாகக் களமிறங்கவிருக்கிறது. படத்தில் ஹீரோவைவிட அதிக முக்கியத்துவம் (பறவை வடிவ) வில்லனுக்கே என்பது இதுவரை வந்த […]

Read More

கட்சி ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்தது – ரஜினி

by on October 20, 2018 0

‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருவது தெரிந்த விஷயம். இதன் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்து வந்தது. நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்த விஷய்த்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ரஜினி. பின்னர் வாரணாசியில் இருந்து சென்னை திரும்பியவர் நிருபர்களைச் சந்தித்தார். “டிசம்பர் 12-ம்தேதி உங்கள் பிறந்தநாளன்று புதுக்கட்சி அறிவிப்பு வருமா..?” என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “கட்சி தொடங்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்து விட்டன. ஆனால், என் பிறந்த நாளன்று கட்சியை […]

Read More

ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு அடுத்த மாத ஆலோசனைக் கூட்டத்தில்..?

by on September 24, 2018 0

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பை வெளியிட்டதையடுத்து ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்யப்பட்டன. அதன் பிறகு மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். ஜூலை மாதம் மாவட்டந்தோறும் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையும், உடனுக்குடன் அடியாள அட்டை […]

Read More