இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கிடக்கும் ஷங்கர் – ரஜினி – அக்க்ஷய் குமார் காம்பினேஷனில் உருவாகும் 2.ஓ படத்தின் முதல் பார்வை மற்றும் டீஸர் இந்திய சினிமா ரசிகர்களைக் கவர்ந்து டிரென்டிங்கில் கலக்கியது.
இந்நிலையில் படத்தின் டிரைலரைப் பார்க்க அத்தனைபேரும் ஆவலாகக் காத்திருக்கும் நிலையில் அதற்கான முன்னறிவிப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
2.o Trailer launch
அதன்படி நவம்பர் 3-ம்தேதி படத்தின் டிரைலர் அதிரடியாகக் களமிறங்கவிருக்கிறது. படத்தில் ஹீரோவைவிட அதிக முக்கியத்துவம் (பறவை வடிவ) வில்லனுக்கே என்பது இதுவரை வந்த எல்லா டிசைன் களிலும் தெரியவந்ததைப் போலவே இந்த டிரைலர் அறிவிப்பு டிசைனிலும் தெரிகிறது.
அறிவிப்பை ஒரு பறவையின் விரல்கள் பிடித்திருப்பதைப் போல் இருக்கும் போஸ்டர் வெகுவாக கவரும் அளவில் உள்ளது.
நவம்பர் 3-க்கு அதிக நாளில்லையே..? கெட் ரெடி டூ வாட்ச்..!