June 27, 2026
  • June 27, 2026
Breaking News

Tag Archives

பிக்பாஸில் கொடுமை மதுமிதா போலீஸில் திடீர் புகார்

by on September 4, 2019 0

பிக் பாஸ் 3 சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த மதுமிதா, பிக் பாஸ் வீட்டில் கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால், போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அத்துடன் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் போலீசில் புகார் ஒன்றை அளித்தது. அதில், மதுமிதா தனக்கு வர வேண்டிய பணத்தை உடனடியாக கேட்டு மிரட்டுவதாகவும், கொடுக்கவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையாளர்களை அழைத்த மதுமிதா, தன் மீது […]

Read More

கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் ஏஆர் ரஹ்மான்

by on July 16, 2019 0

‘லைகா’ நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல் நடிப்பது ஒருபுறமிருக்க, அவர்களுக்காக கமல் நடித்துக்கொண்டிருந்த இன்னொரு படமான ‘சபாஷ் நாயுடு’ தொடர்வதில் சிக்கல் இருந்தது. அதைத் தொடரவே முடியாத நிலையில் அவர்களுக்காக இன்னொரு புதிய படத்தை செய்து தருவது பற்றி கமல் தெரிவிக்க, ‘லைகா’வும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அது கமல் முன்னமே அறிவித்த ‘தலைவன் இருக்கின்றான்’ படம்தான் என்பது தகவல். இந்தப் படத்தை லைகாவுடன் இணைந்து கமலின் ராஜ்கமல் நிறுவனமும் தயாரிக்கவிருக்கிறது. இது ஒரு பெரிய […]

Read More

சிரிக்க வைத்த கிரேஸி மோகன் அழவைத்து சென்றார்

by on June 10, 2019 0

தன் இணையற்ற நகைச்சுவை எழுத்துகள் மூலம் கடந்த முப்பது ஆண்டுகளாக சிரிக்க வைத்த கிரேஸி மோகன் தன் 66 வயதில் மாரடைப்பால் இன்று பிற்பகல் காலமானார். நெஞ்சு வலி காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக 2 மணிக்கு மருத்துமனை நிர்வாகம் அறிவித்தது. பொறியியல் பட்டதாரியான கிரேஸி மோகன், எஸ்.வி.சேகருக்காக ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ நாடகம் எழுதி மேடைக்கு அறிமுகமானார். அதன் மூலம் சாதாரண மோகனாக […]

Read More

புரியலன்ற சோமாறிகளுக்கு கமல் கடும் காட்ட ட்வீட்

by on May 17, 2019 0

‘முதல் இந்து தீவிரவாதி’ பற்றிய பேச்சினால் சர்ச்சையில் கமல் சிக்கியதிலிருந்து தினமும் அது அதன் விளைவுகளை அவர் அனுபவித்தே வருகிறார். அது பற்றிய காரசார விவாதங்கள் ஒரு புறமும், நேரில் செருப்பு, முட்டை வீசுபவர்கள் இன்னொரு புறமுமாக அவரைக் குறிவைக்க… அதில் எரிச்சலடைந்த கமல் இன்று காட்டமாகவே தன் ட்விட்டரில் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். அது வருமாறு…   “சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள்.    மக்கள் எடுத்து […]

Read More

கமல் பிரசாரத்துக்கு தடை கேட்டு தேர்தல் ஆணையத்தில் புகார் மனு

by on May 13, 2019 0

 19-ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு கட்சிகளின் பிரசாரம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிடும்  வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அங்கு பிரசாரம் செய்தார்.   அதில் அவர் “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே ஒரு இந்துதான்..!” என குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.    தமிழக தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் […]

Read More

இந்தியன் 2 படத்துக்கு கமலால் நேர்ந்த கதி

by on May 8, 2019 0

எது எந்தப் படத்துக்கு பலமோ அதுவே அந்தப்படத்துக்கு பலவீனமான நிகழ்ச்சி ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்துக்கு ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. எல்லா இரண்டாவது பாகப் படங்களைப் போலவே ‘இந்தியன் 2’ படத் தொடக்கமும் வெகு விமர்சையாக நடந்தது. கமல் ‘கிழ’ வேடமெல்லாம் போட்டு படப்பிடிப்பும் தொடங்கியது. அப்போதே தன் ஒப்பனை குறித்து அதிருப்தி தெரிவித்த கமல், அதைச் சரிசெய்துவிட்டு படப்பிடிப்பைத் தொடரலாம் என்று நிறுத்தியதாக செய்தி வந்தது. அத்துடன் அவர் அரசியலில் பிஸியாகவே ஷூட்டிங் தொடரவில்லை. அதற்குள் படத்தின் […]

Read More

பொள்ளாச்சி மாணவி விவகாரம் – முதல்வரிடம் கமல் எழுப்பும் கேள்விகள் வீடியோ

by on March 15, 2019 0

சமீபத்தில் நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக மனசாட்சி உள்ள பலரும் பல தளங்களில் தங்கள் அதிர்ச்சியைப் பதிவு செய்து வருகிறார்கள். இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வரிடம் அது தொடர்பான கேள்விகளை எழுபியிருக்கிறார். அந்த வீடியோ கீழே… pic.twitter.com/5OczRUkhbj — Kamal Haasan (@ikamalhaasan) March 14, 2019

Read More

இளையராஜா என்னைவிட கமலுக்குதான் அதிக ஹிட் கொடுத்திருக்கார் – ரஜினி பேச்சு

by on February 3, 2019 0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பிரமாண்டமாக நடத்தும் ‘இளையராஜா 75’ இசை விழாவின் நிறைவு நாளான இன்று இளையராஜாவே இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமாவின் உச்ச பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.    உற்சாகமாக வந்து கலந்து கொண்ட ரஜினியின் பேச்சிலிருந்து…   “கலைகள் அத்தனையிலும் சிறந்தது இசைக் கலைதான். மற்ற கலைகளுக்கெல்லாம் முதன்மையாக இருப்பதும் இசைக் கலைதான். அதனால் இசைக் கலைஞர்கள் மீது எனக்கு மரியாதை அதிகமாக இருக்கும்.   […]

Read More