July 30, 2026
  • July 30, 2026
Breaking News

Tag Archives

யு டியூபுக்கு வருகிறார் பாரதிராஜா என் இனிய தமிழ் மக்களே

by on October 8, 2019 0

இன்றைய தகவல் தொடர்புச் சாதனங்களின் மூலம் யாரும் யாரையும் எப்போதும் தொடர்பு கொள்ளவும், தகவல்களையும் செய்திகளையும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது. அந்த வகையில் யு டியூப் சேனல்கள் இன்று முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதில் முகம் பார்த்து செய்திகளை அறிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது. இதில் வருமானமும் உண்டு என்று கூடுதல் சிறப்பாக இருக்க, பலரும் இப்போது யு டியூப் பக்கம் வர ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் இப்போது இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இணைகிறார். என் இனிய தமிழ் […]

Read More

கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் – சுசீந்திரன்

by on July 27, 2019 0

சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, எம்.சசிகுமார் நடித்திருக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை (27-07-2019) நடைபெற்றது. அதில் இயக்குநர் சுசீந்திரன், சசிகுமார், பாரதிராஜா பேசியதிலிருந்து… சுசீந்திரன் – “நல்லுச்சாமி பிக்சர்ஸ் சார்பில் இது எங்களுடைய மூன்றாவது படம். என் அப்பாவிற்கு விளையாட்டு பிடிக்கும். அதை வைத்து படமெடுக்க வேண்டும் என்றுதான் ‘வெண்ணிலா கபடி குழு’ எடுத்தேன். இப்படத்தில் நடித்தற்காக பாரதிராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கும். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் அவரிடம் வசனங்களைக் கொடுத்து […]

Read More

கபடி வீராங்கனைகளுக்கு பாரதிராஜா வீட்டில் விருந்து

by on March 17, 2019 0

நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’.   இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் பல ஊர்களிலும் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர்.   பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். மார்ச் 14-ம் தேதியுடன் பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த […]

Read More

எதிர்காலத்தில் திருமணம் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன – வைரமுத்து

by on January 22, 2019 0

மீண்டும் எழுந்து வந்திருக்கும் இயக்குநர் சேரனின் ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ திரைப்படம் அவரது 11-வது படைப்பாகும். படத்தில் சேரனின் தங்கையாக நாயகி காவ்யா சுரேஷ் நடிக்க, மாப்பிள்ளையாக நாயகன் உமாபதி ராமையா நடித்துள்ளார். சேரனின் தாய் மாமனாக தம்பி ராமையா நடிக்க மாப்பிள்ளையின் அக்காவாக நடிகை சுகன்யா நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, கார்த்திக் தங்கவேல், கோபி நயினார், நடிகைகள் […]

Read More

சுசீந்திரனின் கென்னடி கிளப் சீனாவில் அபார விலைக்கு விற்றது

by on November 21, 2018 0

சுசீந்திரன் இயக்கித்தில் வெளியாகவுள்ள ‘கென்னடி கிளப்’ சீனமொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. சீனச் சந்தையில் இந்தியப்படங்களுக்கு வரவேற்பு இருக்கும் நிலையில் சீன மொழியில் டப்பிங் செய்வதும் சேர்ந்து கொள்ள இப்படத்தின் டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. பொதுவாகவே விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ‘கென்னடி கிளப்’ப்பின் களம் ஈர்க்கப்பட்டுதான் சீனாவில் இவ்வளவு பெரியத் தொகைக்கு இப்படம் விற்பனையாகியுள்ளது. இப்படம் நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் […]

Read More

பாரதிராஜா, சசிகுமாரை பெண்கள் கபடிக் குழுவுக்கு அழைத்து வரும் சுசீந்திரன்

by on October 23, 2018 0

இயக்குனர் சுசீந்திரன் தற்போது ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கி முடித்திருக்கிறார். இவற்றுள் ஜீனியஸ் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன், சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் ‘கென்னடி கிளப்’ என்ற படத்தை இயக்குகிறார். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் படம் இது. பி. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் இப்படத்தைத் தயாரிக்கிறார். இதில் மீனாட்சி , காயத்ரி , நீது , […]

Read More

கூட இருப்பவர்களுக்கு முதலில் நல்லது செய்யுங்கள் – கமலுக்கு கோரிக்கை

by on September 10, 2018 0

கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு […]

Read More