November 5, 2026
  • November 5, 2026
Breaking News

Tag Archives

ஏழு கடல் ஏழு மலை தமிழ் சினிமாவுக்கான என் கம்பேக்!” – நடிகர் நிவின் பாலி மகிழ்ச்சி!

by on September 26, 2026 0

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயத்தை நேரடியாகத் தொடுகின்ற படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. நடிகர் நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நம்பிக்கையுடன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார். சமீபகாலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை […]

Read More

QuizBites 4.0: தென்னிந்தியாவின் சமையல் வினாடி வினா தளம் மீண்டும் பட்டிமன்றத்தை உயர்த்துகிறது..!

by on March 2, 2026 0

QuizBites 4.0: நான்கு ஆண்டுகள் வலிமை..! சென்னை, மார்ச் 2, 2026: சமையல் அறிவு மற்றும் தொழில்முறை நட்புறவை கொண்டாடுவதில் நான்கு வெற்றிகரமான ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், QuizBites 4.0 அளவு, ஆற்றல் மற்றும் தொழில்துறை அளவிலான பங்கேற்புடன் திரும்பியது. இஸ்பஹானி மையத்தால் தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடத்தப்பட்ட, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமையல் வினாடி வினா மதிப்புமிக்க GRT கிராண்டில் நடைபெற்றது, இதில் தென்னிந்தியா முழுவதிலுமிருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் மற்றும் 100 சமையல்காரர்கள் கலந்து கொண்டனர். […]

Read More

பறந்து போ திரைப்பட விமர்சனம்

by on July 4, 2025 0

முட்டைகளை அடைகாத்தாலும் சிறகு விரித்த தன் குஞ்சுகளை ‘ பறந்து போ… உன் பாதையை நீயே தேடு..!’ என்றுதான் விட்டு விடுகிறது பறவை. மனிதன் மட்டுமே எப்போதும் தன் வாரிசுகள் மீது ஆளுமையை செலுத்தி வாழ்நாள் முழுதும் அடைகாத்துக் கொண்டே இருக்கிறான். இந்த தத்துவார்த்தமான விஷயத்தை இது ஒரு தத்துவம் என்று தெரியாமலேயே போகிற போக்கில் ஜாலியாக ஜோக் அடித்து, பாட்டு பாடிக் கொண்டே சொல்லிவிடுகிறார் இயக்குனர் ராம்.  சொல்லப்போனால் அவரது படங்களிலேயே இந்தப் படம்தான் எளிதாகக் […]

Read More

இயக்குனர் ராம் நமக்கு கிடைத்த பொக்கிஷம்..! – சிவா

by on June 29, 2025 0

*இயக்குநர் ராமின் ’பறந்து போ’ படத்தின் இசை வெளியீட்டு விழா!* ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர், இயக்குநர் கஸ்தூரிராஜா, […]

Read More

எம்ஜிஆர் எங்கிருந்தோ என்னை வாழ்த்துகிறார் – விஷால் பரவசம்

by on January 17, 2025 0

12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயம்.. அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறது இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி […]

Read More

ஓடிடிக்கு சென்சார் தேவை என்பதை அஞ்சலியின் கோலத்தைப் பார்த்தாவது உணருமா அரசு

by on December 5, 2020 0

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக அந்தஸ்து, ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி Netflix தளத்தில் வெளியிட்டிருக்கிரார்கள். இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது. இதில் […]

Read More

கேப்மாரி ஆன்லைன் புரமோட்டர்களிடம் இருந்து தமிழ்சினிமா தப்பிக்குமா?

by on December 8, 2019 0

சினிமா தொழில் தோற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் தலையாய காரணம் “யாருக்கு நாம் படமெடுக்கிறோம்…?” என்று தெளிந்து ஒரு படைப்பை உருவாக்காததும், “எதற்கு யாரிடம் எவ்வளவு செலவழிக்க வேண்டும்…” என்ற கணக்கு இல்லாததும்தான். இதில் முதல் காரணம் படைப்பு சார்ந்தது. இரண்டாவது காரணம் ஆற்றில் போட்டாலும் அளந்து போடாதது. அந்தந்த சமயத்தில் படங்கள் ஓட இதெல்லாம் செய்ய வேண்டும் என்று யாராவது சொல்லிவிட்டால் போதும் ஏன்..? எதற்கு..? அதைச் செய்த படங்களெல்லாம் ஓடினவா..? என்ற எந்தக் […]

Read More

இரண்டு ரூம் போட்டு ஒன்றிலேயே தங்கிய ஹீரோ ஹீரோயின்

by on November 23, 2019 0

இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டை ஒரு மீடியாவின் பேட்டியில் முன் வைத்திருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான ‘போஸ்டர்’ நந்தகுமார். இவர் தயாரித்த ‘பலூன்’ என்ற படத்தில் நடந்த விவகாரம் அது. அதில் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக நடித்திருந்தார்கள். அப்போது நடந்த அனுபவங்களைத்தான் விளக்கியிருக்கிறார் நந்தகுமார். “அஞ்சலி நல்ல மனம் கொண்ட நடிகை. ஆனால், ஜெய் அப்படியல்ல… அத்துடன் அஞ்சலியின் மனதைக் கெடுக்கும் வேலையிலும் அவர் இறங்கினார்.  ஒருமுறை கொடைக்கானலில் ஷூட்டிங்கில் இருந்தபோது டைரக்டர் சென்று அஞ்சலியை “ஷாட் ரெடி” […]

Read More

நடிகைகள் உடலை மெயின்டெயின் பண்ணுவது இப்படித்தான் வீடியோ

by on November 4, 2019 0

கடந்த தலைமுறை நடிகைகள் எல்லாம் நடிகைகள் உடலை மெயின்டெயின் பண்ணாமல் கொழுக் மொழுக் என்று அலைவார்கள். ஆனால், இந்தத் தலைமுறை நடிகைகள் அப்படியல்ல… இந்த நடிகை கூடவா ஜிம் போகிறார் என்று கேட்கும் அளவுக்கு கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். அப்படி சில சிங்கப் பெண்களின் வீடியோக்கள் கீழே…  அஞ்சலி –     #PauseSquats #LegDay 🏋🏻‍♀️ pic.twitter.com/rPT1MqtMzv — Anjali (@yoursanjali) March 14, 2019 ஐஸ்வர்யா மேனன் […]

Read More