July 2, 2025
  • July 2, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இரண்டு ரூம் போட்டு ஒன்றிலேயே தங்கிய ஹீரோ ஹீரோயின்
November 23, 2019

இரண்டு ரூம் போட்டு ஒன்றிலேயே தங்கிய ஹீரோ ஹீரோயின்

By 0 826 Views
Poster Nandhakumar

Poster Nandhakumar

இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டை ஒரு மீடியாவின் பேட்டியில் முன் வைத்திருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான ‘போஸ்டர்’ நந்தகுமார்.

இவர் தயாரித்த ‘பலூன்’ என்ற படத்தில் நடந்த விவகாரம் அது. அதில் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக நடித்திருந்தார்கள். அப்போது நடந்த அனுபவங்களைத்தான் விளக்கியிருக்கிறார் நந்தகுமார்.

“அஞ்சலி நல்ல மனம் கொண்ட நடிகை. ஆனால், ஜெய் அப்படியல்ல… அத்துடன் அஞ்சலியின் மனதைக் கெடுக்கும் வேலையிலும் அவர் இறங்கினார். 

ஒருமுறை கொடைக்கானலில் ஷூட்டிங்கில் இருந்தபோது டைரக்டர் சென்று அஞ்சலியை “ஷாட் ரெடி” என்று நடிக்க அழைத்திருக்கிறார். அவர் செய்த ஒரே தவறு (!) அஞ்சலியை “மேடம்…” என்று அழைக்காததாம். அதைச் சொல்லிக்கொடுத்தவரும் ஜெய்தான்.

அதனால், அதை ஒரு பிரச்சினையாக்கிய ஜெய் அஞ்சலியிடம் வயிறு வலிப்பதாகக் கூற வைத்து அவரை தனது காரிலேயே சிகிச்சைக்கு சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அந்த ஷெட்யூலே கேன்சலானது. 

இன்னொரு முறை இருவருக்கும் நட்சத்திர ஓட்டலில் இரண்டு ரூம்கள் போட்டுக் கொடுத்தாராம் நந்து. ஆனால், அதில் ஒன்றில் மட்டுமே இருவரும் தங்கியிருக்கிறார்கள். அப்படியானால் இன்னொரு ரூமையாவது கேன்சல் பண்ணலாம் என்றால் அதற்கு இருவரும் ஒத்துக்கொள்ளவில்லையாம். அந்த ரூம் ஒன்றின் ஒருநாள் வாடகை பன்னிரெண்டாயிரமாம்.

இந்த அனுபவங்களால் இனி படமே எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தாராம் அவர்.

நந்தகுமாரை இப்படி ‘நொந்த’ குமாராக்கலாமா ஜெய்..?