November 12, 2019
  • November 12, 2019
Breaking News
  • Home
  • சேரன்

Tag Archives

மதுமிதாவை சேரன் சந்தித்த பின்னணி என்ன ?

by on October 24, 2019 0

பிக்பாஸ் நிகழ்ச்சி கண்டிப்பாக சமுதாயத்துக்கு உகந்தது அல்ல. இருந்தாலும் சேரன் போன்றவர்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் செல்வாக்கை உயர்த்தி வருகிறார்கள் பிக்பாஸ் தயாரிப்பாளர்கள். அதன் சூட்சுமம் புரியாமல் அல்லது பணத்துக்காக சேரன் போன்றோரும் அதில் சிக்கி தங்கள் மரியாதையை இழந்து வருகிறார்கள். இது ஒரு புறமிருக்க, தனிப்பட்ட முறையில் சேரன் எப்படிப்பட்டவர் என்பது ஊரறிந்த… உலகறிந்த விஷயம். அந்த ஷோவில் உருப்படியாக கலந்து கொண்டு நல்ல பெயருடன் வெளிவந்த அவர், அதன்பிறகும் அதில் கலந்து கொண்ட உறுப்பினர்களைச் […]

Read More

லொஸ்லியாவை வைத்து சேரனின் மாஸ்டர் பிளான்

by on September 5, 2019 0

சமூகத்துக்குத் தேவையற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதில் சேரன் என்ற நல்ல இயக்குநரும் சிக்கினாரே என்ற கவலைதான் பல ஆரோக்கிய சிந்தனையாளர்களுக்கும். ஆனால், அவர் பட்ட கடன்களை அடைக்கவே அப்படி முடிவெடுத்தார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதிலிருந்து மதுமிதா வெளியே வந்தவுடனேயே அந்நிகழ்ச்சிக்கு எத்தனை லட்சங்கள் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது என்ற விஷயம் அதிகாரபூர்வமாகவே ஊர் உலகுக்குத் தெரிந்தது.  70 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் சேரனே பிக்பாஸ் படத்தை வென்றால் மிகப்பெரிய தொகை […]

Read More

திருமணம் திரைப்பட விமர்சனம்

by on March 2, 2019 0

தமிழ் சினிமாவில் சேரன் படங்களுக்கு என்று தனியிடம் உண்டு. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் எப்படிப் பட்டதென்று வரும் காலத்துக்குச் சொல்லும் வரலாறாய் அமைவது அவரது படங்களின் தனிச்சிறப்பு. அப்படி காலம் காலமாய் நம்மிடையே நிலவி வரும் ‘திருமணம்’ என்ற இருமனம் இணையும் சடங்குகள் சரியாகத்தான் நடைபெறுகின்றனவா என்று ஒரு உரைகல்லாக இந்தப்படத்தைத் தந்திருக்கிறார். இருக்கிறதோ இல்லையோ பிடிக்கிறதோ இல்லையோ ஊருக்காக உறவுக்காகவென்று மகளின் திருமணத்தை ஊரறிய நடத்தி கடைசிக்காலம் வரை கடனாளியாக தவிக்கும் எத்தனையோ பெற்றோரை […]

Read More

ரஜினி தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன் யார் – சீமான்

by on January 31, 2019 0

‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ள படத்தில் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுத, இஷான் […]

Read More

சேரனுக்கு கேரள நடிகைகள் வைக்கப்போகும் செக்

by on January 24, 2019 0

இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெயர் புதிது போல் தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கிய அதே ராஜ்குமார் தான் இவர். இந்தப் படம் குறித்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அவர் “ராஜாவுக்கு […]

Read More

எதிர்காலத்தில் திருமணம் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன – வைரமுத்து

by on January 22, 2019 0

மீண்டும் எழுந்து வந்திருக்கும் இயக்குநர் சேரனின் ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ திரைப்படம் அவரது 11-வது படைப்பாகும். படத்தில் சேரனின் தங்கையாக நாயகி காவ்யா சுரேஷ் நடிக்க, மாப்பிள்ளையாக நாயகன் உமாபதி ராமையா நடித்துள்ளார். சேரனின் தாய் மாமனாக தம்பி ராமையா நடிக்க மாப்பிள்ளையின் அக்காவாக நடிகை சுகன்யா நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, கார்த்திக் தங்கவேல், கோபி நயினார், நடிகைகள் […]

Read More

திருமணம் செய்து திரும்பி வந்த சேரன்..!

by on December 13, 2018 0

தமிழ்ப்படவுலகின் பெருமைமிக்க இயக்குநர்களில் ஒருவரான சேரன் திரைப்படங்களை லாபகரமாக வெளியிடும் சி2எச் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதில் மும்முரமாக இறங்கியிருந்தார். அந்த திட்டத்தால் அவர் இயக்குநராகச் செயல்படமுடியாமல் இருந்தது. அதன் காரணமாகவே அவர் கடைசியாக இயக்கிய ‘ஜேகே’ படம் மிகத் தாமதமாக வெளிவந்ததிலும் அவர் மீண்டும் படம் இயக்குவது தாமதப்பட்டது. அந்தச் சிக்கல்கள் எல்லாவற்றிலும் இருந்து மீண்டு ‘திருமணம் (சில திருத்தங்களுடன்)’ என்ற படத்தை செய்து முடித்து மீண்டும் திரையுலகில் இயக்குநராகப் பிரவேசிக்கிறார். படத்தில் அவரே நடிக்க அவருடன் […]

Read More
  • 1
  • 2