June 19, 2026
  • June 19, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி
December 1, 2020

வெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி

By 0 745 Views

இயக்குனர் வெற்றிமாறன் நகைச்சுவை நடிகர் சூரி யை கதாநாயகன் ஆக்கி ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று கடந்த ஒரு வருடமாகவே சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதுகுறித்த தகவல் ஒன்று வெளிவந்திருக்கிறது. இலக்கியத் தரம் வாய்ந்த கதைகளை படமாக்கும் வல்லமை பெற்ற வெற்றிமாறன் இந்த படத்துக்காக எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை அடியொற்றியே திரைக்கதை அமைத்திருக்கிறார் என்று தெரிகிறது.

இந்தப் படத்தில் சூரி ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வேடம் ஏற்கிறாராம். அவருடன் இயக்குனர் பாரதிராஜா ஒரு போராளி வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் 8ஆம் தேதி சத்தியமங்கலத்தில் தொடங்கி தொடர்ந்து நடக்கிறது.

இந்த முறையும் வெற்றி மாறனின் முயற்சி வெற்றி பெறட்டும்..!

Soori joins with Barathiraja

Soori joins with Barathiraja