April 18, 2024
  • April 18, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு
May 14, 2019

ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு

By 0 825 Views

குழந்தைகளின் சூப்பர் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.லோக்கல்.

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் கோடை விருந்தாக வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தைப் பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் –

“கேடி பில்லா கில்லாடி ரங்கா 2 மடங்கு லாபம் கொடுத்த ஒரு படம். அதில் இருந்து சிவா சாரின் ஒவ்வொரு படத்தின் வியாபாரத்தையும் கவனித்து வருகிறேன், மிகப்பெரிய உயரத்துக்கு போயிருக்கிறார். குழுந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் பிடித்த ஆல் செண்டர் ஹீரோவாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவா சார் படம் எப்போ ரிலீஸ் பண்ணாலும் ஹிட் அடிக்கும், இது உச்சக்கட்ட கோடையில் வெளியாகிறது, இந்த கோடையில் இந்த படம் ஆட்சி செய்யும்..!”

ரோபோ சங்கர் –

“ராஜேஷ் சார் படம் என்றாலே குடும்பத்தோடு ரசித்து பார்க்கும் படமாக இருக்கும். சிவாவை முன்பு எப்படி பார்த்தோமோ அப்படியே இருக்கார். ஒவ்வொரு காட்சியிலும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஒரு பெரிய மனசு வேண்டும். அவர் நடனத்திலும் மிகப்பெரிய உயரத்தை தொட்டிருக்கிறார்..!”

தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா –

“கேடி பில்லா கில்லாடி ரங்கா சமயத்தில் எப்படி அவரை சந்தித்தேனோ, அதே மாதிரி தான் இன்றும் இருக்கிறார் சிவகார்த்திகேயன். எவ்வளவு பெரிய படத்தையும் தன் தோள்களில் தாங்கக் கூடிய ஒரு ஹீரோவாக இன்று மாறியிருக்கிறார். வழக்கமாக விநியோகஸ்தர்கள் தான் எப்போ ரிலீஸ் எப்போ ரிலீஸ்னு கேட்பாங்க. ஆனால் இந்த படத்துக்கு குழந்தைகள், குடும்பங்கள் எப்போ ரிலீஸ்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க.

ராஜேஷ் ஒரு எளிமையான இயக்குனர். எந்த சூழ்நிலையிலும் கூலாக இருப்பவர். டி.ராஜேந்தர் சாருக்கு அடுத்து அதிகப்படியான துறைகளில் வித்தகர் ஹிப் ஹாப் ஆதி தான். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக வந்திருக்கிறது. என் வாழ்வில் மிக முக்கியமான, சிரமமான காலகட்டத்தில் எனக்கு இந்த படத்தை பண்ணி கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதை எக்காலத்திலும் மறக்க மாட்டேன்..!”

Mr.Local Press Meet

Mr.Local Press Meet

இயக்குனர் ராஜேஷ் –

“சிவகார்த்திகேயன், ஞானவேல்ராஜா சாருடன் இந்த படத்தை நான் செய்கிறேன் என்ற பேச்சுவார்த்தை வந்த உடனேயே “எனக்கு பெரிய ஹிட் படமா கொடுத்துருங்க…” என்றார் ஞானவேல்ராஜா சார். “குடிக்கிற காட்சிகள், குடித்து விட்டு பாடுற பாடல், பெண்களைத் திட்டி பாடுற பாடல் என எதுவும் வேண்டாம் சார்…” என்றார் சிவகார்த்திகேயன். அப்படி எதுவும் இந்த படத்தில் இருக்காது, கிளீன் படமாக இருக்கும்.

சிவா சார் தொலைக்காட்சியில் இருந்த காலத்தில் இருந்தே நான் அவரின் ரசிகனாக இருக்கிறேன். இந்த படத்தில் இவ்வளவு நடிகர்கள் வந்ததற்கு முக்கிய காரணமே சிவா சார் தான். அத்தனை பேரையும் ஒரே படத்தில் கொண்டு வந்தது தான் சவாலான விஷயம், அதை சிறப்பாக செய்து கொடுத்தார் ஞானவேல்ராஜா.

சிவாவுக்கு சமமான கதாபாத்திரம் நயன்தாராவுடையது. அவரும் படத்தின் மிகப்பெரிய பலம். கோடையில் குடும்பத்துடன் போய் ரசிக்கும் வகையில் ஒரு படமாக இருக்கும்..!”

சிவகார்த்திகேயன் –

“டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைச்சு கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம்.

அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நல்ல ஒரு குழு அமைந்தது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நயன்தாராவுடன் இரண்டாவது படம்.

வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது. இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார்.

இனிமேல் ஆறு மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். ரசிகர்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மேன்மேலும் உயர்த்துகிறது..!”