May 1, 2026
  • May 1, 2026
Breaking News
  • Home
  • K.E.Gnanavelraja

Tag Archives

இண்டஸ்ட்ரியில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான்தான்..! – ஞானவேல் ராஜா

by on January 13, 2026 0

“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா ! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று  பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் *கலை இயக்குநர் […]

Read More

புரட்சித் தலைவர் ஆசியுடன் ‘வா வாத்தியார்’ ஜெயிக்க வேண்டும்..! – கார்த்தி

by on December 9, 2025 0

‘வா வாத்தியார்’ திரைப்பட முன் வெளியீட்டு  விழா ! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.  இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிகழ்வினில்..,  நடிகை ஷில்பா பேசியதாவது..,   […]

Read More

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது !

by on October 8, 2025 0

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி […]

Read More

கங்குவா திரைப்பட விமர்சனம்

by on November 15, 2024 0

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவை ஒரு பான் இந்திய ஸ்டாராக ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் கே.இ.ஞானவேல் ராஜாவும் சிறுத்தை சிவாவும் சேர்ந்து மிரட்டி இருக்கும் படம். 

1070 இல் ஆரம்பிக்கும் கதை 2024 இல் வந்து இப்போதைக்கு முற்றுப்பெறுகிறது.  அது எப்படி என்பதை இரு வேறு காலகட்ட சுவாரஸ்யத்துடன் திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சிவா.

தற்போதைய காலகட்டத்தில் கோவாவில் சூர்யா ஒரு பிளேபாயாகவும், காவல்துறை நேரடியாக பிடிக்க முடியாத குற்றவாளிகளை பிடித்து கொடுக்கும் Bounty hunter ஆகவும் இருக்கிறார். கிட்டத்தட்ட அதே டூட்டியில் அவருக்கு ஏட்டிக்குப் போட்டியாக வருகிறார் திஷா பதானி.

இவர்கள் இருவருக்கும் முறையே அல்லக் கைகளாக யோகி பாபுவும், ரெடின்ஸ் கிங்ஸ்லியும் வருகிறார்கள். இவர்கள் செய்யும் அலப்பறைக்கு இடையில் ரஷ்ய விஞ்ஞான ஆராய்ச்சி முகாமில் இருந்து தப்பிய சிறுவன் ஒருவன் குறுக்கிட அந்தச் சிறுவன் மீது சூர்யாவுக்கு ஒரு இனம் புரியாது ஈர்ப்பு ஏற்படுகிறது. அதைக் கண்டுபிடிக்கும் வேளையில் கடந்த வரலாற்றுக் காலத்தில் நடந்த சம்பவங்கள் அவரது நினைவுக்கு வருகின்றன. அதன் முடிவு என்ன என்பது மீதிக்கதை.

ஆனால் அது முடியவில்லை. இரண்டாம் பாகத்திலும் தொடரும் என்பது உலகறிந்த விஷயம்தான்.

பிளேபாய், ஆக்ஷன் ஹீரோ, பாசக்கார மனிதன் என்று எல்லா வித ரசிகர்களையும் கவர பலமுகம் காட்டி படம் முழுவதும் உணர்ச்சிமயம் காட்டியிருக்கிறார் சூர்யா. 

அதுவும் 1070 காலகட்டத்தில் ஒரு பழங்குடிகளின் இனத் தலைவரின் மகனாக தங்கள் இனத்தை அழிக்க வந்த கருங்காலி நட்டியை தண்டிக்கும்போது காட்டும் கண்டிப்பில் ஆகட்டும், அதன் விளைவாக நட்டியின் மகன் அனாதையாக, அவனை அக்கணமே தந்தையாகத் தத்தெடுத்துக் கொள்ளும் பாசத்தில் ஆகட்டும், அத்தனைப் பாசத்தைக் கொட்டி வளர்த்தும், அவனே ஒரு கட்டத்தில் தன்னைக் கொல்ல முயலும் போது கண்களில் காட்டும் பரிவு கலந்த ஏமாற்றத்தில் ஆகட்டும், அந்தச் சிறுவனுக்காக தன் இனத்தைத் துறந்து காட்டுக்குள் தனிமைப்பட்டுப் போவதிலாகட்டும்… நடிகர் திலகத்தின் மிச்சமாக நடிப்பைக் கொட்டி இருக்கிறார் சூர்யா.

அவர் மட்டும் அல்லாமல் எல்லா பாத்திரங்களும் படம் நெடுக போடும் காட்டுக் கத்தலை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கலாம்.

ஆயிரம் வருடங்கள் பயணப்படும் இத்தனை நீளமான படத்தில் அவருக்கு ஒரு சரியான ஜோடி இல்லாமல் இருப்பது குறைதான். தற்காலத்தில் நடக்கும் கதையில் மட்டும் திஷா பதானி ஒரு ஆறுதலாக கொஞ்ச நேரம் வந்து போகிறார்.

படம் நெடுக சூர்யாவே ஆக்கிரமித்திருப்பதில் வில்லனாக வந்திருக்கும் பாபி தியோலின் நடிப்புக்குப் பெரிய பங்கு இல்லை.

நட்டி, போஸ் வெங்கட், பிரேம் உள்ளிட்ட எல்லோருக்கும் நெகடிவ் வேடங்கள்தான். அவர்களில் கருணாஸ் மட்டும் பாசிட்டிவாக வருகிறார். 

கே எஸ் ரவிக்குமார், கோவை சரளா இருவரும் வழக்கமாகப் பேசும் கோவைத் தமிழை மாற்றி கோவா தமிழ் பேச வைத்திருப்பது ரசிக்கும்படி இல்லை.

யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி இருவராலும் நம்மைச் சிரிக்க வைக்க முடியவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் தொழில்நுட்பக் கலைஞர்கள்தான்.

வெற்றியின் ஒளிப்பதிவு உச்சம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை தேவைக்கு அதிகம் என்கிற நிலையில் கலை இயக்கம், அனிமேஷன் உள்ளிட்ட நுட்பங்கள் தமிழுக்கு உச்சபட்சம்….

அதிலும் முழுமையான முதல் இந்திய 3டி படமாக வந்திருப்பது அனைத்து இந்திய ரசிகர்களையும் ஈர்க்கும். 

கடைசி கடைசியாக கார்த்தியும் உள்ளே வந்து அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறார்.

சத்தத்தை மட்டும் குறைத்திருந்தால் சவுண்டான படமாக இருந்திருக்கும். 

கங்குவா – தொழில்நுட்ப மிரட்டல்..!

 

Read More

மன்னிப்பின் உயர்வைப் பேசும் படம் கங்குவா..! – சூர்யா

by on November 7, 2024 0

’கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது! ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது, “சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இத்தனை […]

Read More

என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன் – சூர்யா

by on October 29, 2024 0

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா! ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14- ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா சனியன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பாடலாசிரியர் விவேகா பேசியிருப்பதாவது, “’கங்குவா’ படம் நிச்சயம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். புதிய உலகம் ஒன்றை […]

Read More

விக்ரமின் நடிப்புக்கு தங்கலான் சரியான தீனி போட்டு இருக்கிறது – பா.ரஞ்சித்

by on August 20, 2024 0

*’சீயான்’ விக்ரமின் ‘தங்கலான்’ படக் குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா*  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரைகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம்… வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தங்கலான் […]

Read More

என் ஆத்மாவுக்குள் புகுந்து கொண்ட விக்ரம் தங்கலானை புரிந்து நடித்தார் – பா.ரஞ்சித்

by on August 6, 2024 0

*சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு* சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை […]

Read More

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

by on May 26, 2024 0

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.  இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், […]

Read More

30 கோடி வாங்கும் இடத்திற்கு சந்தானம் உயர வேண்டும்..! – ஞானவேல்ராஜா

by on November 20, 2023 0

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”. நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன், தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து […]

Read More