October 22, 2021
  • October 22, 2021
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இயக்குனர் சரவண சக்தி மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் கதை திருட்டு புகார்
March 28, 2021

இயக்குனர் சரவண சக்தி மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் கதை திருட்டு புகார்

By 0 197 Views

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவருமான சிங்காரவேலன் நாயகன், பில்லா பாண்டி படங்களை இயக்கியவரும், நடிகருமான சரவண சக்தி மீது கதை திருட்டு குற்றசாட்டு சுமத்தியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..

 

“கொரானா ஊரடங்கின்போது என்னை தொடர்பு கொண்ட துணை நடிகர் மற்றும் இயக்குனருமான சரவணஷக்தி படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாகவும், பணஉதவி செய்யுமாறு கேட்டார். “மீன் வாங்கி கொடுப்பதை காட்டிலும் மீன்பிடிக்க கற்றுகொடுப்பது சிறப்பானது” என்கிறகொள்கையுடையவன்நான்.  
அதனால் நான்ஒரு கதை சொல்கிறேன். அதற்கு திரைக்கதை அமைத்து தாருங்கள். அதற்காக
50,000 ம் ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறினேன்.   அதற்கு சரவண சக்தி சம்மதித்தார்.

“எல்லாம் அவன் செயல்”
“பைரவா” படங்கள் பாணியில் மருத்துவ கல்லூரி மாணவியை அந்த கல்லூரி உரிமையாளர், மற்றும் தாளாளர் இருவரும் கற்பழித்து கொலை செய்துவிடுகிறார்கள்்.

அந்த பெண் நாயகனின் தங்கை. நாயகன் சாதாரண ஆள்.

எனவே ஆக்க்ஷன் அடிதடி என்று இல்லாமல் தன்னுடைய புத்திசாலிதனத்தால் தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களை கொலை செய்து பழி வாங்குகிறான்.

சட்டத்தாலும், நீதியாலும் அவனை நெருங்க கூட முடியாது என்ற ஒருவரி கதை. இதற்கு திரைக்கதை அமைத்து அதற்கு” எங்க குலசாமி” என தலைப்பு வைத்து தயார் செய்து தாருங்கள் என கூறி பணமும் அனுப்பி வைத்தேன்.

என்னிடம் ஒப்புக்கொண்டபடி திரைக்கதை அமைத்து தரவில்லை. அதன் பின்னர் நான் கூறிய ஒருவரி கதையை எனக்கு தெரிந்த வேறு ஒரு குழுவிடம் கொடுத்து திரைக்கதை அமைக்க சொல்லி அதனை வைத்து தற்போது படம் தயாரிக்கும் முயற்சி மும்முரமாக நடந்துவருகிறது.

படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை உருவாக்கியுள்ளது. கதையின் கருவும் விவாத பொருளானது. இந்த நிலையில் 27.03.2021 அன்று சாலிக்கிராமத்தில் உள்ள என் அலுவலகத்திற்கு சில அடியாட்களுடன் மதுபோதையில் வந்த சரவண சக்தி ஊழியர்களை அநாகரிகமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அலுவலக ஊழியர்கள் அவர்களுக்கு தெரியாமல் விருகம்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் வருவதற்கு முன்பு சிங்காரவேலனை கொலை செய்து தலையுடன் தான் செல்வேன் என்றுு கொக்கரித்துக்கொண்டிருந்த சரவண சக்தி வகையறா காவல்துறை வாகனத்தை பார்த்தவுடன் பின்னங்கால் பிடரி தெறிக்க அருணாச்சலம் சாலையில் ஓட்டம் பிடித்ததை சாலையில் சென்றுகொண்டிருந்தமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

காவல்நிலையத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தபோது சரவண சக்தி அலைபேசியை எடுக்கவில்லை. இன்று மீண்டும் தொடர்பு கொண்டபோது தான் மதுரையில் இருப்பதாக கூறியவரிடம் நாளை( 29.03.2021) காலை 10 மணிக்கு கண்டிப்பாக விசாரணைக்கு காவல்நிலையம் வரவேண்டும் என்ற ஆய்வாளரின் உத்தரவுப்படி வர உள்ளார் சரவண சக்தி.

இவர் ஏதோ என் மீது புகார் கொடுக்கப்போவது போன்று நாளை (29.03.2021) காலை பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

சரவண சக்தி ஏற்கனவே இயக்கி வெளியான நாயகன் படம்,” ஸ்பீடு” என்கிற ஹாலிவுட் படத்தின் உல்டாவாகும். “பில்லா பாண்டி” படத்தின் கதையும் மூர்த்தி என்பவர் எழுதியதாகும். அவரது மேற்பார்வையில் இவர் இயக்கிய படமாகும் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

இதன்மூலம் சரவண சக்தியால் சொந்தமாக கதை தயார் செய்து படம் இயக்கும் திறமை இல்லாதவர். அடுத்தவன் கதை இரவல் வாங்கியோ அல்லது திருடியோ படம் இயக்குபவர் என்பதை புரிந்துகொள்ளலாம்.

எங்க குலசாமி என்கிற படத்தின் கதை என்னுடையது என்பதையும் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இதனால் அவரது பெயருக்கு எந்த களங்கத்தையும் என் திரைக்கதைஏற்படுத்தாது என்று உறுதி கொடுக்கப்பட்டு நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் அவர்களிடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து என் தரப்பு நியாயங்களை, அதற்குரிய ஆவணங்களை முன்வைத்து வெற்றிபெறுவேன் என்பதை உறுதிபட தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்..!”

என்று கூறப்பட்டுள்ளது.