இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று எட்டு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. குண்டுவெடிப்பு இடங்களில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நான்கு ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகம் அடங்கும். மேலும் அசம்பாவிதங்கள் நிகழாவண்ணம் தடுக்க இலங்கை முழுவதும் ஊடரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் சில சம்பவங்கள் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. மேற்படி குண்டுவெடிப்புகளில் இந்தியா உள்பட அமெரிக்கா, சீனா, வங்காளதேசம், பாகிஸ்தான், டென்மார்க், […]
Read Moreசன் பிக்சர்ஸ் தயாரித்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் 3 ஆவது பாகம் நேற்று முன் தினம் 19 ஏப்ரல் அன்று வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகி இரு மொழிகளிலும் வரவேற்கப்பட்ட படமாக அமைந்தது. இரு மொழிகளிலும் பெரிய ஒப்பனிங் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் முந்தைய இரண்டு பாகங்களும் மக்களால் ரசிக்கப்பட்டதுதான். கடந்த இரு தினங்களில் மட்டும் இந்தப்படம் தமிழில் சுமார் 43 கோடிகளும், தெலுங்கில் 10 கோடிகளும் வசூலித்திருக்கிறதாம். […]
Read Moreவிஜய் சேதுபதி ரொம்ப கூலான மனிதர் என்பதும், மற்றவர்களிடம் ஜோவியலாகப் பழகக்கூடியவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதில் ‘ப்ப்பா…’ காயத்ரி என்றால் கொஞ்சம் கூடுதலான குஷியுடனேயே இருப்பார். அப்படி சமீபத்தில் வெளீயான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்த காயத்ரியுடன் அவர் குஷியாக டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இதை வெளியிட்டது காயத்ரியேதான். படத்தின் இடைவேளைகளில் சும்மா அரட்டை அடிக்காமல் இப்படி இருவரும் டான்ஸ் பிராக்டிஸ் செய்து வந்தது இந்த வீடியோவைப் […]
Read Moreகடந்த 40 வருடங்களாக நம் வாழ்வில் காதல், கல்யாணம், காதுகுத்தல், இறுதியாத்திரை என்று சகல நிகழ்வுகளில் மட்டுமல்லாமல் ஊர்ப்பயணங்களிலும் கைகோர்த்து வந்த ஒரே துணைவன் இளையராஜா மட்டும்தான். இதை நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்ட இப்படத்தின் இயக்குநர் சரவண ராஜேந்திரன் இசை ஞானி என்ற நடு உளியை அடித்து அதன்மீது எழுப்பிய காதல் கூடாரம்தான் இந்தப்படம். முதலில் ஒரு காதல் படத்துக்கான களம் அழகாக அமைந்து விட்டாலே உற்சாகம் தொற்றிக் கொண்டு விடும். அப்படித்தான் இதில் இந்திய சர்க்கஸ் […]
Read More