November 15, 2026
  • November 15, 2026

Simple

ராக்கி பற்றிய திரைப்பட விசனம்

by on December 26, 2021 0

நன்றாக வைத்தார்கள் ரவுடி பிக்சர்ஸ் என்று தங்கள் நிறுவனத்துக்கு பெயர் – நயன்தாரா விக்னேஷ் சிவன் நடத்தும் சினிமா கம்பெனியைத்தான் சொல்கிறோம். பெயரில் என்ன இருக்கிறது… நல்ல படம் எடுத்தால் சரிதான் என்று அவர்கள் எடுத்த படங்களை ஆதரிக்கவே செய்தோம்.  கடைசியாக ‘கூழாங்கல்’ படத்தைக் கையில் எடுத்து அதை ஆஸ்கர் தூரத்துக்கு வீசியதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால், இப்போது அவர்கள் பேனரில் வெளியாகி இருக்கும் ‘ராக்கி’ அவர்கள் கம்பெனிப் பெயரின் பசுத்தோலை உரித்திருக்கிறது.   நாம் சரியான […]

Read More

ரைட்டர் திரைப்பட விமர்சனம்

by on December 25, 2021 0

போலீஸ் கதைகளில் இதுவரை நல்ல போலீஸ், தீய போலீஸ் என்று இரண்டு வகை போலீஸைத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் போலீஸ் எப்படி இயங்குகிறார்கள் என்று சொன்ன படங்கள் குறைவு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடாத இரண்டு போலீஸ் விஷயங்களை முன்னிறுத்தி இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப். அவை பல காலமாக கேட்கப்பட்டு வரும் போலீஸ் சங்க விவகாரம் ஒன்று. இன்னொன்று நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காவலர்களின் தற்கொலை. இதற்காகவே பிராங்க்ளினைப் பாராட்டலாம். திருவெறும்பூர் காவல் […]

Read More

தள்ளிப் போகாதே படத்தின் திரை விமர்சனம்

by on December 25, 2021 0

காலம் காலமாக காதல் கதைகளுக்குப் பஞ்சம் இல்லை. அது ஒரு தலைக் காதலோ, இருதலைக் காதலோ அல்லது முக்கோணக் காதல் கதையோ, அதை எப்படிச் சொல்கிறார்கள், என்ன விதமான பிரச்சனைகளை உள்ளே வைத்து என்ன சுவாரஸ்யத்தைத் தருகிறார்கள்  என்பதைப் பொறுத்தே காதல் கதைகள் வேறுபடுகின்றன. வித்தியாச காதல் கதைகளை யோசித்து யோசித்து கண்டவுடன் காதல், காணாமல் காதல், தாலி கட்டும் நேரத்தில் கை கூடும் காதல், நிச்சயதார்த்தம் ஆன பின் பூக்கும் காதல், கல்யாணம் ஆன பின்னும் […]

Read More

ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் திரை விமர்சனம்

by on December 24, 2021 0 In திரைப்படம்

எதிர்மறையான தலைப்புகள், தவறான உறவுகள், கொடூரம் கொண்ட திருப்பங்கள், சாதிய கலப்புகள் என்றெல்லாம் தமிழ் சினிமா வேறு வேறு பாதையில் போய்க் கொண்டிருக்க நல்ல விஷயங்களை சொல்லும் நேர்மறையான கதைகளைக் கொண்ட படங்கள் அருகி வருகின்றன. அப்படி எல்லாம் இல்லை, நாங்கள் இருக்கிறோம் என்று களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி.   30 உறுப்பினர்கள் 12 குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய குடும்பம் கூட்டுக் குடும்பமாக வாழ்வது இந்த காலத்தில் சாத்தியமா என்ற வாதத்தை […]

Read More

வடிவேலுவுக்கு ஒமிக்ரான் பாதிப்பு..? மருத்துவ மனையில் அனுமதி

by on December 24, 2021 0

லைக்கா புரடக்ஷன்ஸ் தயாரிக்க சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் நாயகனாக நடிப்பதன் மூலம் மீண்டும் பரபரப்பான செய்திகளில் வந்தார் வைகைப்புயல் வடிவேலு. படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பரபரப்புக்குள்ளான படத்தின் பாடல் கம்போஸிங் வேலைகளுக்காக லண்டன் சென்ற டீமில் வடிவேலுவும் இடம் பெற்றார். தன் படத்தின் பாடல் உருவாக்கத்தில் எப்போதுமே ஆர்வம் காட்டுவார் வடிவேலு. எனவே அவரும் இயக்குநர் சுராஜுடன் லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில் லண்டன் சென்று இரண்டு நாள்களுக்கு முன் சென்னை திரும்பிய […]

Read More

பிளட் மணி Blood Money படத்தின் திரை விமர்சனம்

by on December 23, 2021 0

இருபத்து ஏழரை மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான ஒரு திரில்லர். படத்தில் முக்கிய பாத்திரமாக இருக்கும் பிரியா பவானி சங்கர் ஒரு முன்னணி மீடியாவில் வேலை பார்க்கிறார். சமையல் ஷோ நடத்தி கொண்டிருந்தவருக்கு செய்திப் பிரிவுக்கு புரமோஷன் கிடைக்க அவர் ஏற்றுக் கொள்ளும் முதல் வேலையே மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகிறது. குவைத்தில் வேலை பார்க்கும் கிஷோரும் அவரது தம்பியும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்க அவர்கள் ஏற்படுத்திய ஒரு விபத்துக்காக ஐந்து வருடம் கழித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. […]

Read More