August 3, 2026
  • August 3, 2026

Simple

பான் இண்டியா படம் எடுப்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் – அமீர் அதிரடி

by on December 14, 2022 0

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். […]

Read More

பல சூப்பர் ஸ்டார்களை சிறிய படங்கள்தான் உருவாக்கி உள்ளன – அர்ச்சனா கல்பாத்தி

by on December 11, 2022 0

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, OTT தளத்திலும் தற்போது வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை லவ் டுடே குழு இன்று ஏற்பாடு செய்தது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் […]

Read More

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்பட விமர்சனம்

by on December 10, 2022 0

தலைப்பு புரியுதுல்ல..? வைகைப் புயல் வடிவேலு மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டார் என்று சொல்கிற தலைப்புதான் இது. அவரே நடித்து புகழ்பெற்ற பாத்திரமான நாய் சேகராக இதிலும் வந்து, லந்து பண்ணியிருக்கிறார். வீட்டில் விலை உயரந்த பொருள் காணாமல் போனால் கூட வருத்தப்பட்டு பின்னர் விட்டு விடுபவர்கள், தாங்கள் வளர்க்கும் நாயைக் காணவில்லை என்றால் சாப்பாடு, தூக்கம் இன்றித் தவிப்பார்கள். இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி நாய் வளர்ப்பவர்கள் வீட்டில் இருந்து நாயைக் கிட்னாப் செய்து கொண்டு போய், […]

Read More

விஜயானந்த் திரைப்பட விமர்சனம்

by on December 10, 2022 0 In திரைப்படம்

கர்நாடகாவில் பெரிய தொழில் நிறுவனமான வி ஆர் எல் எப்படி உருவானது… அதை உருவாக்க அதன் நிறுவனர் விஜய் சங்கேஸ்வர் எப்படி பாடுபட்டார் என்பதை ஒரு பயோபிக் ஆக சொல்லி இருக்கும் படம் தான் விஜயானந்த். இரண்டு சகோதரர்களுடன் பிறந்து அப்பா பி.ஜி. சங்கேஸ்வர் நடத்தி வந்த அச்சகத் தொழிலையே தானும் கற்றுக்கொண்டு அதில் மேம்பாட்டை கொண்டு வந்த விஜய் சங்கேஸ்வர், அந்த வளர்ச்சியிலும் திருப்தி இல்லாமல் தன் சொந்த முயற்சியில் ஒரு லாரியை வாங்கி அதை […]

Read More

குருமூர்த்தி திரைப்பட விமர்சனம்

by on December 9, 2022 0

நாம் அறிந்த திருடன் போலீஸ் கதையை கமர்சியல் கலந்து மசாலா வேர்க்கடலை சுவையில் படமாகக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் கே.பி.தனசேகரன். . இதில் போலீஸ் யார் என்பது நமக்குத் தெரிகிறது. அது நட்ராஜ் என்கிற நட்டி. அவர்தான் குருமூர்த்தி. கதை இதுதான். ராம்கி ஒரு பெரிய பணக்காரர். அவர் ஒரு வீடு வாங்குவதற்காக ஐந்து கோடி ரூபாயைக் காரில் எடுத்துச் செல்லும்போது, அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தி தண்ணீர் […]

Read More

நயன்தாராவின் கனெக்ட் படத்தில் ஆன்லைனில் பேயோட்டும் அதிசய சாமியார்

by on December 8, 2022 0

நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் ‘கனெக்ட் ‘ படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யராஜ், இந்தி நடிகர் அனுபம்கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் குறித்து பேசினார் இயக்குநர் அஸ்வின் சரவணன்… “இதுவும் ஆவி சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் வழக்கமான ஆவி கதைகளில் இருந்து இந்தப்படம் மாறுபட்டது.கொரோனா ஊரடங்குக் காலத்தில் எல்லோரும் தனித்தனியாக வீட்டுக்குள் இருந்த காலகட்டத்தில் நடப்பது […]

Read More