August 30, 2025
  • August 30, 2025
Breaking News
April 8, 2019

ஏஆர் முருகதாஸ் ரஜினி படம் எஸ்ஜே சூர்யா வில்லனா?

By 0 844 Views

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ரஜினி நடிக்கும் தலைப்பிடப் படாத ‘தலைவர் 167’ படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் (10-04-2019) அன்று மும்பையில் தொடங்க இருக்கிறது. 

படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் காட்டுத் தீயாய் பரவியது. பல ஊடகங்களிலும் இந்தச் செய்தி வேகமாகப் பரவ, படத்தின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி ரஜினி 167 படத்தில் நயன்தாரா மட்டுமே இதுவரை முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் எனவும், மற்ற நடிகர் நடிகையர் எவரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் வீணான வதந்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஸோ, இப்போதைக்கு எஸ்.ஜே.சூர்யா செய்தியில் உண்மையில்லை… டாட்..!